» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பள்ளி தாளாளரிடம் ரூ.10.5 கோடி நில மோசடி: தந்தை, மகன் மீது வழக்குப்பதிவு!
வியாழன் 12, மார்ச் 2026 8:33:05 AM (IST)
பள்ளி விரிவாக்கத்திற்காக நிலம் வாங்கித் தருவதாகக் கூறி, பள்ளித் தாளாளரிடம் ரூ.10.5 கோடி மோசடி செய்த தந்தை மற்றும் மகன் மீது நாகர்கோவில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
பஞ்சாப் மாநிலம் மொஹா பகுதியைச் சேர்ந்தவர் சார்லஸ் ஜெபக்குமார் (50). இவர் மொஹாவிலும், குமரி மாவட்டம் மார்த்தாண்டத்திலும் சர்வதேசப் பள்ளிகளை நடத்தி வருகிறார். தனது பள்ளியை விரிவுபடுத்துவதற்காகத் தமிழகத்தில் நிலம் வாங்க முயன்றபோது, குடும்ப நண்பர் மூலம் நாகர்கோவில் வட்டக்கரையைச் சேர்ந்த ஜோசப் மரியஜெபஸ்டின் அறிமுகமாகியுள்ளார்.
ஜோசப் மரியஜெபஸ்டின் மற்றும் அவரது மகன் பிரகாஷ் ஆகியோர், செங்கல்பட்டு மாவட்டம் கீழக்கோட்டை கிராமத்தில் உள்ள 4 ஏக்கர் நிலத்தை வாங்கித் தருவதாகக் கூறியுள்ளனர். இதனை நம்பிய சார்லஸ் ஜெபக்குமார், பல தவணைகளாக மொத்தம் ரூ.10.5 கோடி பணத்தை அவர்களது வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார்.
ஆனால், பணத்தைப் பெற்றுக் கொண்ட ஜோசப் மரியஜெபஸ்டின், நிலத்தைச் சார்லஸ் பெயரில் கிரயம் செய்து கொடுக்காமல், தனது சொந்தப் பெயரிலேயே கிரயம் செய்து கொண்டு ஏமாற்றியது தெரியவந்தது.
தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த சார்லஸ் ஜெபக்குமார், இது குறித்துப் பஞ்சாப் மாநிலம் மொஹா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அங்கு வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும், சம்பவம் நடந்தது குமரி மாவட்டம் என்பதால் அந்தப் புகார் குமரி மாவட்டக் காவல்துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
பஞ்சாப் போலீசார் அனுப்பிய முதல் தகவல் அறிக்கை (FIR) பஞ்சாபி மொழியில் இருந்ததால், குமரி மாவட்ட போலீசாரால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதன்பின்னர், அந்த ஆவணங்கள் சென்னைக்கு அனுப்பப்பட்டுத் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டன.
மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், ஜோசப் மரியஜெபஸ்டின் மற்றும் அவரது மகன் பிரகாஷ் ஆகிய இருவர் மீதும் நாகர்கோவில் நேசமணிநகர் போலீசார் மோசடி உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

வளைகுடா நாடுகளில் போர் பதற்றம்: தமிழக மீனவர்களை மீட்க விஜய் வசந்த் எம்.பி. மனு!
வியாழன் 12, மார்ச் 2026 12:27:28 PM (IST)

பெட்ரோல், டீசல் விலை உயர்வு வதந்தி: பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகள் குவிந்ததால் பரபரப்பு!
வியாழன் 12, மார்ச் 2026 12:09:26 PM (IST)

மாணவி கொலை வழக்கு: ஆய்வாளர் சஸ்பெண்ட் - நெல்லை சரக டிஐஜி உத்தரவு
வியாழன் 12, மார்ச் 2026 10:58:24 AM (IST)

தமிழகத்தில் மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள்: திருச்சியில் பிரதமர் மோடி பேச்சு!
வியாழன் 12, மார்ச் 2026 8:21:36 AM (IST)

தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க எதிர்ப்பு : உப்பளத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
வியாழன் 12, மார்ச் 2026 7:52:15 AM (IST)

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: குமரியில் 5,000 உணவகங்கள் மூடும் அபாயம்!
புதன் 11, மார்ச் 2026 8:36:32 PM (IST)

