» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
குமரி கோமேதகம் ஆர். பொன்னப்ப நாடார் பிறந்தநாள்: தமிழக அரசு சார்பில் மரியாதை
செவ்வாய் 3, மார்ச் 2026 12:18:52 PM (IST)

குமரி கோமேதகம் ஆர். பொன்னப்ப நாடார் பிறந்தநாளை முன்னிட்டு நாகர்கோவிலில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு தமிழக அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைய அரும்பாடுபட்ட தியாகியும், முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான 'குமரி கோமேதகம்' ஆர். பொன்னப்ப நாடார் பிறந்தநாளை முன்னிட்டு (03.03.2026), நாகர்கோவிலில் உள்ள அவரது திருவுருவச்சிலைக்கு அரசு சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது.
நாகர்கோவில் மாநகராட்சி பூங்காவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பொன்னப்ப நாடார் திருவுருவச்சிலைக்கு, கன்னியாகுமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா. ஜாண் ஜெகத் பிரைட், அவரது வாரிசுகள் பொன் விஜயராகவன், பொன் கிருஷ்ணகுமார் ஆகியோர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
ஆர். பொன்னப்ப நாடார் அவர்கள் 03.03.1923 அன்று கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பாலவிளை கிராமத்தில் ராகவன் நாடார் - அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். குமரி தந்தை மார்ஷல் நேசமணியை தனது அரசியல் மற்றும் வழக்கறிஞர் தொழிலுக்கு குருவாக ஏற்றவர். விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராகவும், தமிழ்நாடு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, ஏ.வி.எம் (A.V.M) கால்வாய் புனரமைப்பு, பல்வேறு குடிநீர் திட்டங்கள், சாலை மேம்பாடு மற்றும் பள்ளிக்கூடங்களை உருவாக்குதல் போன்ற ஆக்கப்பூர்வமான பணிகளை கிள்ளியூர் தொகுதிக்கு பெற்றுத் தந்துள்ளார். இவர் 12.10.1976 அன்று பம்பாயில் ஏற்பட்ட விமான விபத்தில் மரணமடைந்தார்.
இவரது தன்னலமற்ற மக்கள் பணியைப் போற்றும் வகையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 24.02.2026 அன்று நாகர்கோவில் மாநகராட்சி பூங்காவில் இவரது திருவுருவச்சிலையைத் திறந்து வைத்துப் பெருமை சேர்த்தார். அதன் தொடர்ச்சியாக, இன்று அன்னாரது பிறந்தநாளை முன்னிட்டுச் சிறப்பு மரியாதை வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) செல்வலெட் சுஷ்மா, பொன்னப்ப நாடார் அவர்களின் மருமகள்கள் கிருஷ்ணகுமாரி, நிர்மலா மற்றும் அரசு அலுவலர்கள், பணியாளர்கள் உட்படப் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பெட்ரோல், டீசல் விலை உயர்வு வதந்தி: பெட்ரோல் பங்குகளில் வாகன ஓட்டிகள் குவிந்ததால் பரபரப்பு!
வியாழன் 12, மார்ச் 2026 12:09:26 PM (IST)

மாணவி கொலை வழக்கு: ஆய்வாளர் சஸ்பெண்ட் - நெல்லை சரக டிஐஜி உத்தரவு
வியாழன் 12, மார்ச் 2026 10:58:24 AM (IST)

பள்ளி தாளாளரிடம் ரூ.10.5 கோடி நில மோசடி: தந்தை, மகன் மீது வழக்குப்பதிவு!
வியாழன் 12, மார்ச் 2026 8:33:05 AM (IST)

தமிழகத்தில் மாற்றத்தை மக்கள் விரும்புகிறார்கள்: திருச்சியில் பிரதமர் மோடி பேச்சு!
வியாழன் 12, மார்ச் 2026 8:21:36 AM (IST)

தூத்துக்குடியில் கப்பல் கட்டும் தளம் அமைக்க எதிர்ப்பு : உப்பளத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
வியாழன் 12, மார்ச் 2026 7:52:15 AM (IST)

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு: குமரியில் 5,000 உணவகங்கள் மூடும் அபாயம்!
புதன் 11, மார்ச் 2026 8:36:32 PM (IST)