» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
வீடுபுகுந்து காவலரே பெண்ணிடம் பாலியல் அத்துமீறல் : டிடிவி தினகரன் கண்டனம்!
சனி 7, மார்ச் 2026 5:11:27 PM (IST)
சென்னையில் காவலர் ஒருவரே பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவத்திற்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளதாவது: சென்னையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, குடிபோதையில் இருந்த காவலர் ஒருவர் ராயப்பேட்டையில் உள்ள வீட்டிற்குள் புகுந்து அங்கிருந்த பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. பெண்களைக் காக்க வேண்டிய சீருடை அணிந்த காவலர்களே, மதுபோதையில் அவர்களின் பாதுகாப்பைப் பறிக்கும் கொடூரர்களாக மாறி வருவது நெஞ்சை உலுக்குகிறது.தமிழகம் எங்கும் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதால், பெண்கள் வீட்டிற்குள் கூட பாதுகாப்பாக இருக்க முடியாத கொடூரமான நிலை நிலவுகிறது. திமுக நிர்வாகிகள் சிலரின் அடாவடித்தனம், கஞ்சா போதையில் திரியும் இளைஞர்கள், போதையில் தடம் மாறும் காவலர்கள், எனப் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கும் நபர்களை, திமுக அரசு தனது நிர்வாகத் திறமையின்மையால் வளர்த்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கைக் காக்கத் தவறிய 'போதை மாடல்' திமுக அரசை மக்கள் துரத்தியடித்து, தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் நாள் வெகுதொலைவில் இல்லை என்றும் தனது பதிவில் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் இருந்து விடைபெறும் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு
சனி 7, மார்ச் 2026 5:37:23 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட வருவாய் அலுவலர் திடீர் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு
சனி 7, மார்ச் 2026 4:52:06 PM (IST)

விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றால் வீட்டில் அனுமதி மறுப்பு: விஜய் மீது சங்கீதா புதிய புகார்
சனி 7, மார்ச் 2026 4:36:03 PM (IST)

திருட வந்த இடத்தில் குறட்டை விட்ட திருடன்: கன்னியாகுமரியில் விசித்திர சம்பவம்!
சனி 7, மார்ச் 2026 4:30:54 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.136 கோடி மதிப்பீட்டில் புதிய மருத்துவமனை கட்டிடம் திறப்பு விழா
சனி 7, மார்ச் 2026 12:04:40 PM (IST)

கன்னியாகுமரியில் ரூ.91.20 கோடி நலத்திட்ட உதவிகள்: உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சனி 7, மார்ச் 2026 11:10:09 AM (IST)

