» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000; ரூ.8,000 கூப்பன்: திமுக தேர்தல் அறிக்கை அறிவிப்புகள்

ஞாயிறு 29, மார்ச் 2026 8:40:35 PM (IST)

திமுகவின் 2026 சட்டமன்றத் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார். 

"சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்" என்ற தாரக மந்திரத்துடன், அனைத்துத் தரப்பு மக்களையும் கவரும் வகையிலான வாக்குறுதிகள் இதில் இடம்பெற்றுள்ளன.

தற்போது வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ₹1,000-லிருந்து ₹2,000 ஆக உயர்த்தப்படும்.

இல்லத்தரசிகள் வீட்டு உபயோகப் பொருட்கள் வாங்குவதற்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் ₹8,000 மதிப்புள்ள கூப்பன் வழங்கப்படும்.

புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உதவித்தொகை ₹1,500 ஆக உயர்த்தப்படும்.

பெண்களுக்கு மானியத்துடன் ₹5 லட்சம் கடன் உதவி வழங்கப்படும்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு: காலை உணவுத் திட்டம்: 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை இருந்த இத்திட்டம் இனி 8-ஆம் வகுப்பு வரை (15 லட்சம் குழந்தைகள் பயன்பெறும் வகையில்) விரிவுபடுத்தப்படும்.

கல்லூரி மாணவர்களுக்கு மீண்டும் மடிக்கணினி வழங்கப்படும்.

அரசுத் துறைகளில் காலியாக உள்ள 1.50 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்.

2 லட்சம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கத் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும்.

விவசாயம் மற்றும் இதர நலத்திட்டங்கள்:

நெல் மற்றும் கரும்பு: நெல் கொள்முதல் விலை குவிண்டாலுக்கு ₹3,500 ஆகவும், கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ₹4,500 ஆகவும் உயர்த்தப்படும்.

ஓய்வூதியம்: முதியோர் உதவித்தொகை ₹2,000 ஆகவும், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை ₹2,500 ஆகவும் உயர்த்தப்படும்.

மருத்துவக் காப்பீடு: முதல்வர் காப்பீட்டுத் திட்ட வரம்பு ₹10 லட்சமாக உயர்த்தப்படும்.

மீனவர் நலன்: மீன்பிடித் தடைக்கால நிவாரணம் ₹12,000 ஆக உயரும்.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்:
மத்திய அரசின் 8-வது ஊதியக்குழு நடைமுறைக்கு வந்தவுடன், மாநிலத்திலும் உடனடியாகச் செயல்படுத்தப்படும்.

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு உரிய நேரத்தில் பதவி உயர்வு வழங்கப்படும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory