» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பெரம்பூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல்!
திங்கள் 30, மார்ச் 2026 1:10:05 PM (IST)

பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடுவதற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் வேட்புமனு தாக்கல் செய்தார்.
தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் வருகின்ற ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்று காலை தொடங்கியது. இந்த நிலையில், பெரம்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிடும் விஜய், வியாசர்பாடி தேர்தல் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் கீதாவிடம் வேட்புமனுவைத் தாக்கல் செய்தார்.
அவருக்கு மாற்று வேட்பாளராக வடசென்னை வடக்கு மாவட்டச் செயலாளர் சிவா வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். வேட்புமனு தாக்கலின்போது, தவெக பொதுச் செயலாளர் என். ஆனந்த், இணைப் பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல் குமார் உடனிருந்தனர். இதனிடையே, திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதியிலும் போட்டியிடவுள்ள தவெக தலைவர் விஜய், வருகின்ற ஏப்ரல் 2 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார்.
முன்னதாக தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், தவெக தேர்தல் பிரசார பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கம் தொகுதியிலும் வேட்புமனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் சோகம்: மேற்கூரை இடிந்து பெண் பக்தர் பலி; 2 பேர் படுகாயம்!
திங்கள் 30, மார்ச் 2026 9:31:02 AM (IST)

எடப்பாடி பழனிசாமியின் பிரசார வாகனத்தில் திடீர் சோதனை: நாகர்கோவிலில் பரபரப்பு
திங்கள் 30, மார்ச் 2026 9:18:01 AM (IST)

ஒட்டப்பிடாரத்தில் கிருஷ்ணசாமி போட்டி: புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு
திங்கள் 30, மார்ச் 2026 8:42:33 AM (IST)

மகளிர் உரிமைத் தொகை ரூ.2,000; ரூ.8,000 கூப்பன்: திமுக தேர்தல் அறிக்கை அறிவிப்புகள்
ஞாயிறு 29, மார்ச் 2026 8:40:35 PM (IST)

பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் களம் காணும் விஜய்: திமுக எம்.எல்.ஏ-க்களுடன் நேரடி மோதல்!
ஞாயிறு 29, மார்ச் 2026 8:32:48 PM (IST)

தூத்துக்குடி தொகுதியில் ஸ்ரீநாத் போட்டி: தவெக வேட்பாளர்கள் பட்டியல் - விஜய் அறிவிப்பு!
ஞாயிறு 29, மார்ச் 2026 7:53:45 PM (IST)

