» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத் தேசிய மாநாடு: டி.எஸ்.ஆர். சுபாஷ் தேசிய செயலாளராகத் தேர்வு!
செவ்வாய் 31, மார்ச் 2026 8:43:23 PM (IST)

அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தேசிய செயலாளராக டி.எஸ்.ஆர். சுபாஷ் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடைபெற்ற அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் 11-வது தேசிய மாநாட்டில், புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. இந்த மாநாட்டில் அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ், அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தேசிய செயலாளராகப் போட்டியின்றி ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அவரைத் தொடர்ந்து, தேசிய செயற்குழு உறுப்பினர்களாக எம்.பி. மதிமகாராஜா (தலைவர், புதுச்சேரி பத்திரிகையாளர்கள் யூனியன்). எஸ். மோகன்ராஜ் (கோவை) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். புதிதாகப் பொறுப்பேற்றுக்கொண்ட நிர்வாகிகளுக்கு, சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மத்திய தகவல் தொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் டாக்டர் பெம்மசானி சந்திரசேகர் நேரில் வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
மத்திய அமைச்சரின் வருகையைப் பாராட்டி, தேசியச் செயலாளர் டி.எஸ்.ஆர். சுபாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் அனைவரும் இணைந்து அவருக்கு ஏலக்காய் மாலை அணிவித்துச் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இம்மாநாட்டில் நாட்டின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பத்திரிகையாளர் சங்கப் பிரதிநிதிகள் திரளாகக் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆட்டோ டிரைவர் வெட்டிக்கொலை: 2 சிறுவர்கள் உட்பட 3பேர் கைது - பட்டப்பகலில் பயங்கரம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 5:43:06 PM (IST)

நாம் தமிழர் கட்சியினர் சட்டப்பேரவை செல்ல வேண்டும் : மக்களுக்கு வேண்டுகோள் விடுத்த சேரன்!
செவ்வாய் 31, மார்ச் 2026 5:10:13 PM (IST)

தனி தொகுதிகளில் போட்டியிடும் வேற்று மதத்தவர் வேட்புமனு தள்ளுபடி: இந்து முன்னணி வலியுறுத்தல்!
செவ்வாய் 31, மார்ச் 2026 5:05:02 PM (IST)

தேர்தல் பார்வையாளர்களை நேரில் சந்தித்துப் புகார் அளிக்கலாம்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்!
செவ்வாய் 31, மார்ச் 2026 4:44:06 PM (IST)

விஜய் மீது வழக்கு: டி.ஜி.பி-யிடம் அறிக்கை கேட்கிறது தேர்தல் ஆணையம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 3:30:09 PM (IST)

குமரி மாவட்டத்தில் முதல் நாளில் 15 பேர் மனுத் தாக்கல்: பத்மநாபபுரத்தில் மந்தம்!
செவ்வாய் 31, மார்ச் 2026 12:00:24 PM (IST)

