» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

போர்சூழலில் தவித்து வந்த மீனவர்களை மீட்ட மத்திய அரசு - பிரதமர் மோடிக்கு நன்றி!

திங்கள் 6, ஏப்ரல் 2026 10:53:01 AM (IST)



பிரதமர் மோடியின் ராஜதந்திர முயற்சியால் 345 இந்திய மீனவர்கள் ஈரானிலிருந்து பாதுகாப்பாக சென்னை திரும்பியடைந்தனர். மீனவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா நன்றி தெரிவித்துள்ளார்.

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது; ஈரான், பஹ்ரைன் போன்ற மத்திய கிழக்கு நாடுகளில் மீன்பிடித் தொழிலுக்காக சென்று, தற்போதைய போர்சூழலில் தவித்து வந்த 327 இந்திய தமிழ் மீனவர்கள் உட்பட 345 இதர இந்திய மீனவர்களை நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு மீட்டு தமிழகம் கொண்டுவந்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது.

கொரோனா, ரஷ்யா-உக்ரைன் போர், ஈரான்-இஸ்ரேல் போர் என எந்தவொரு பேரிடர் வந்தாலும் இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரையும் பத்திரமாக மீட்டு என்றும் காத்து வரும் நமது பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கும், அதற்கு என்றும் உறுதுணையாக திகழும் மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கும் எத்தனை நன்றிகள் கூறினாலும் தகும்! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads



Tirunelveli Business Directory