» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மதுரை சித்திரைத் திருவிழா: வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:19:58 PM (IST)
மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவுக்காக வைகை அணையிலிருந்து விநாடிக்கு 500 கன அடி வீதம் 6 நாள்களுக்கு தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
உலகப் பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் முக்கிய திருவிழாக்களில் ஒன்றான சித்திரைத் திருவிழா ஆண்டு தோறும் வெகுவிமர்சையாக கொண்டாப்பட்டு வருகிறது. விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளான மீனாட்சியம்மன் திருக்கல்யாணம், அழகரின் வைகை ஆற்றில் எழுந்தருளும் வைபவத்தைக் காண பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள், மதுரையில் கூடுவார்கள்.
இந்த நிலையில், கள்ளழகர் கோயில் திருவிழாவை முன்னிட்டு, வருகிற 30-ஆம் தேதி கள்ளழகர் எதிர்சேவை நிகழ்வும், மே 1-ஆம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வும் நடைபெறவுள்ளது.
மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, கள்ளழகா் ஆற்றில் இறங்கும் வைபவத்துக்காக, வெள்ளிக்கிழமை(ஏப். 24) முதல் 6 நாள்களுக்கு வைகை அணையிருந்து 500 கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வைகை அணையிலிருந்து நீர் திறக்கப்படுவதால் தேனி, மதுரை மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நீட் தேர்வு ஹால் டிக்கெட்: நாளை காலை 10 மணிக்கு வெளியீடு – தேசிய தேர்வுகள் முகமை அறிவிப்பு!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 1:16:58 PM (IST)

பைக் விபத்து: மேலும் ஒரு இளைஞர் உயிரிழப்பு!
ஞாயிறு 26, ஏப்ரல் 2026 11:02:07 AM (IST)

இனி தினமும் 2 முறை ஸ்ட்ராங் ரூம் ஆய்வு : அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
சனி 25, ஏப்ரல் 2026 5:19:09 PM (IST)

குழந்தைகளை அரசியலுக்குப் பயன்படுத்துவதா? த.வெ.க தலைவர் விஜய் மீது விசிக புகார்!
சனி 25, ஏப்ரல் 2026 4:26:08 PM (IST)

அதிமுக கூட்டணிக் கட்சி முகவர்கள் மிகுந்த விழிப்புடன் பணியாற்ற வேண்டும்: இபிஎஸ் வேண்டுகோள்!
சனி 25, ஏப்ரல் 2026 3:36:21 PM (IST)
_1777100644.jpg)
தென் தமிழக கடலோர பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி : ஏப்.30 வரை மழை பெய்ய வாய்ப்பு!
சனி 25, ஏப்ரல் 2026 12:34:37 PM (IST)

