» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.60% வாக்குப்பதிவு: தொகுதி வாரியான முழு விவரம்
வெள்ளி 24, ஏப்ரல் 2026 5:08:39 PM (IST)
2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 சட்டமன்றத் தொகுதிகளில் சராசரியாக 75.60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் நேற்று (ஏப்ரல் 23) விறுவிறுப்பாக நடைபெற்றது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. காலை 9 மணி நிலவரப்படி 17.19 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.
நேரம் செல்லச் செல்ல வாக்காளர்களின் வருகை அதிகரித்து, வாக்குப்பதிவு விறுவிறுப்படைந்தது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது; குறிப்பிட்ட நேரத்திற்குள் வரிசையில் நின்றிருந்த வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டு வாக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இறுதி நிலவரப்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் சராசரியாக 75.60 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
தொகுதி வாரியான வாக்குப்பதிவு விவரங்கள் :
கன்னியாகுமரி 81.43
நாகர்கோவில் 74.72
குளச்சல் 74.12
பத்மநாபபுரம் 75.41
விளவங்கோடு 75.77
கிள்ளியூர் 71.29
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 5 மரண தண்டனை - போக்சோ நீதிமன்றம் அதிரடி!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 5:21:40 PM (IST)

ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கு: 9பேரின் மரண தண்டனையை உறுதி செய்ய சி.பி.ஐ. முறையீடு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 4:21:17 PM (IST)

தமிழக தேர்தல் அரசியலில் புதிய விடியல்: 85% வாக்குப்பதிவு குறித்து விஜய் கருத்து!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 4:04:18 PM (IST)

வாக்குப்பதிவில் வரலாறு படைத்த தமிழகம்: திமுக வேட்பாளர்களுடன் ஸ்டாலின் திடீர் ஆலோசனை!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 3:51:57 PM (IST)

செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகள் மீது நடவடிக்கை : டி.எஸ்.ஆர். சுபாஷ் வலியுறுத்தல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:40:55 PM (IST)

குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:26:16 PM (IST)

