» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சிறுமிகள் பாலியல் வன்கொடுமை: குற்றவாளிக்கு 5 மரண தண்டனை - போக்சோ நீதிமன்றம் அதிரடி!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 5:21:40 PM (IST)
5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், குற்றவாளிக்கு 5 மரண தண்டனை விதித்து சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள மருதிப்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரன் (45). இவர், கடந்த 2024-ஆம் ஆண்டு 9 முதல் 10 வயதுக்குட்பட்ட 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகார் எழுந்தது. இது குறித்து திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, காவல்துறையினர் சந்திரனைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கு, சிவகங்கை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதையடுத்து, 5 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த சந்திரனுக்கு ஒவ்வொரு பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் தலா ஒரு மரண தண்டனை வீதம் மொத்தம் 5 மரண தண்டனைகளை விதித்து உத்தரவிட்டார்.
மேலும், குற்றவாளிக்கு ரூ.11,000 அபராதம் விதிக்கப்பட்டது. அத்துடன், பாதிக்கப்பட்ட 5 சிறுமிகளுக்கு தலா ரூ.7 லட்சம் வீதம், மொத்தம் ரூ.35 லட்சம் இழப்பீடாக அரசு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். இந்தத் தீர்ப்பு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கொடிய குற்றத்திற்குத் தகுந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 75.60% வாக்குப்பதிவு: தொகுதி வாரியான முழு விவரம்
வெள்ளி 24, ஏப்ரல் 2026 5:08:39 PM (IST)

ஜெயராஜ்-பென்னிக்ஸ் கொலை வழக்கு: 9பேரின் மரண தண்டனையை உறுதி செய்ய சி.பி.ஐ. முறையீடு!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 4:21:17 PM (IST)

தமிழக தேர்தல் அரசியலில் புதிய விடியல்: 85% வாக்குப்பதிவு குறித்து விஜய் கருத்து!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 4:04:18 PM (IST)

வாக்குப்பதிவில் வரலாறு படைத்த தமிழகம்: திமுக வேட்பாளர்களுடன் ஸ்டாலின் திடீர் ஆலோசனை!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 3:51:57 PM (IST)

செய்தி மக்கள் தொடர்பு அதிகாரிகள் மீது நடவடிக்கை : டி.எஸ்.ஆர். சுபாஷ் வலியுறுத்தல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:40:55 PM (IST)

குமரி, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்!
வெள்ளி 24, ஏப்ரல் 2026 12:26:16 PM (IST)

