» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
போகாத ஊருக்கு வழி காண்பிக்கும் தவெகவின் அமைச்சரவை பட்டியல் : சேகர்பாபு கிண்டல்
திங்கள் 27, ஏப்ரல் 2026 7:59:18 PM (IST)
தவெகவின் அமைச்சரவை பட்டியல் என்பது இல்லாத உருட்டு. போகாத ஊருக்கு வழி காண்பிக்கும் என்று சேகர்பாபு கிண்டல் செய்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வந்துள்ள அமைச்சர் பி.கே.சேகர்பாபு தனது குடும்பத்துடன் குறிஞ்சியாண்டவர் கோயில், பூம்பாறை குழந்தை வேலப்பர் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது, திராவிட மாடல் 2.0 ஆட்சிதான் தமிழகத்தில் மலரும். அதற்கு, மக்களின் முகத்திலேயே தெரியும் மகிழ்ச்சிதான் சாட்சி. சென்னை எப்போதுமே திமுகவின் கோட்டை தான். 2021 மற்றும் 2024 தேர்தலில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் திமுகவுக்கு கிடைத்தது. கடந்த தேர்தலில் சென்னையில் பதிவான வாக்குகளே 2026 தேர்தலிலும் பதிவாகியுள்ளன.
அரண்டவன் கண்ணுக்கு இருண்டது எல்லாம் பேய் என்ற பழமொழிக்கு எங்களால்தான் வாக்குப் பதிவு அதிகரித்துள்ளது என்று சொல்லும் தவெகவுக்குப் பொருந்தும். 2021 தேர்தலுக்கு பிறகு 2024 மக்களவைத் தேர்தலுக்காக முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய களப்பணி வியப்புக்குரியது. அது தேர்தலிலும் எதிரொலித்தது.
அதன் பிறகு ஒன்றரை ஆண்டுகளாக 2026 சட்டப்பேரவைத் தேர்தலுக்காக முதல்வர் ஆற்றிய பணிகள் அளப்பரியது. தேர்தல் திசைக்காட்டியாக அவர் அளித்த பயிற்சியில் தேர்தல் களத்தில் ராணுவ வீரராக நின்றவர்கள் தற்போது களைப்பாற சுற்றுலா வந்துள்ளனர். தவெகவின் அமைச்சரவை பட்டியல் என்பது இல்லாத உருட்டு. போகாத ஊருக்கு வழி காண்பிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி நிகர லாபம் ரூ.1,337 கோடியாக உயர்வு : நிர்வாக இயக்குனர் தகவல்
திங்கள் 27, ஏப்ரல் 2026 10:02:11 PM (IST)

தூத்துக்குடி சிவன் கோவில் சித்திரை திருவிழா 7-ஆம் திருநாள் : சிவப்பு சாத்தி கோலத்தில் நடராஜர் வீதி உலா!
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:29:12 PM (IST)

அடையாள அட்டை வழங்குவதில் குளறுபடி: தேர்தல் ஆணையத்திடம் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் புகார்!
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:25:38 PM (IST)

வன்முறை வெறியாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது நடவடிக்கை: வேல்முருகன் கோரிக்கை
திங்கள் 27, ஏப்ரல் 2026 11:20:15 AM (IST)

சுசீந்திரம் தாணுமாலயசாமி கோவிலில் சித்திரை திருவிழா தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:20:33 AM (IST)

தமிழகத்தில் 4 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்: அக்னி நட்சத்திரத்திற்கு முன்பே உக்கிரமாகும்..!
திங்கள் 27, ஏப்ரல் 2026 9:14:35 AM (IST)


