» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோடை விடுமுறையை முன்னிட்டுச் சிறப்பு ரயில்கள் இயக்கம் : தெற்கு ரயில்வே அறிவிப்பு!
வியாழன் 30, ஏப்ரல் 2026 8:38:48 AM (IST)
கோடை விடுமுறை கால நெரிசலைச் சமாளிக்க சென்னை எழும்பூர் - கன்னியாகுமரி, தாம்பரம் - தென்காசி உள்ளிட்ட பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாகத் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயில் கால அட்டவணை விவரங்கள்:
1. எழும்பூர் - கன்னியாகுமரி சிறப்பு ரயில் (வண்டி எண்: 06045/06046):
சென்னை எழும்பூரில் இருந்து இன்று (வியாழக்கிழமை) இரவு 11:50 மணிக்குப் புறப்படும் ரயில், நாளை மதியம் 1 மணிக்குக் கன்னியாகுமரி சென்றடையும்.
மறுமார்க்கமாக, கன்னியாகுமரியில் இருந்து மே 3-ஆம் தேதி இரவு 11:25 மணிக்குப் புறப்படும் ரயில், மறுநாள் காலை 11:30 மணிக்கு எழும்பூர் வந்தடையும்.
2. தாம்பரம் - தென்காசி சிறப்பு ரயில் (வண்டி எண்: 06089/06090):
தாம்பரத்தில் இருந்து இன்று இரவு 10:30 மணிக்குப் புறப்படும் ரயில், நாளை காலை 10 மணிக்குத் தென்காசி சென்றடையும்.
மறுமார்க்கமாக, செங்கோட்டையிலிருந்து மே 3-ஆம் தேதி இரவு 9:30 மணிக்குப் புறப்படும் ரயில், மறுநாள் காலை 10:30 மணிக்குத் தாம்பரம் வந்தடையும்.
3. ஈரோடு/போத்தனூர் - சென்னை சென்ட்ரல்:
ஈரோடு - சென்னை (06026): இன்று காலை 9:20 மணிக்குப் புறப்பட்டு மாலை 5 மணிக்குச் சென்னை சென்ட்ரல் வந்தடையும்.
சென்னை - போத்தனூர் (06025): இன்று மாலை 6:45 மணிக்குப் புறப்பட்டு நாளை அதிகாலை 5:15 மணிக்குப் போத்தனூர் சென்றடையும்.
போத்தனூர் - சென்னை (06028/06027): மே 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் போத்தனூரிலிருந்து காலை 7:40 மணிக்கும், மறுமார்க்கமாகச் சென்னையிலிருந்து மாலை 6:45 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்.
இந்தச் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது. தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பயணிகள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சியா? ஆட்சி மாற்றமா? கருத்து கணிப்புகளால் பரபரப்பு!
வியாழன் 30, ஏப்ரல் 2026 10:42:12 AM (IST)

தூத்துக்குடியில் வாக்கு எண்ணிக்கை கண்காணிப்பு பணி : கூடுதல் பார்வையாளர்கள் நியமனம்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 8:46:01 AM (IST)

போலீசார் சுட்டதில் காயம்: தென்காசியில் பாதுகாப்பு இல்லை - தூத்துக்குடிக்கு மாற்றப்பட்ட வாலிபர் புகார்!
வியாழன் 30, ஏப்ரல் 2026 8:06:24 AM (IST)

போலி பாலிசி தயாரித்த நெல்லை வாலிபர் கைது : தூத்துக்குடி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அதிரடி
புதன் 29, ஏப்ரல் 2026 8:43:21 PM (IST)

கள்ளக்காதலை எதிர்த்தவர் கொலை: வாலிபருக்கு ஆயுள் தண்டனை - பத்மநாபபுரம் நீதிமன்றம் தீர்ப்பு
புதன் 29, ஏப்ரல் 2026 5:00:02 PM (IST)

பேரறிவாளன் வழக்கறிஞராகப் பதிவு: நீதித்துறைக்கே இழுக்கு - காங். எம்பி சுதா கடும் கண்டனம்
புதன் 29, ஏப்ரல் 2026 4:23:21 PM (IST)


