» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
17-ஆவது சட்டப்பேரவை கூடியது: முதல்வர் விஜய் மற்றும் உறுப்பினர்கள் பொறுப்பேற்பு!
திங்கள் 11, மே 2026 10:45:41 AM (IST)

தமிழகத்தில் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், 17-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் இன்று காலை புனித ஜார்ஜ் கோட்டையில் தொடங்கியது. இதில் முதலமைச்சர் விஜய் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் சட்டமன்ற உறுப்பினர்களாகப் பதவியேற்றனர்.
முன்னதாக, சோழவந்தான் தொகுதி தவெக உறுப்பினர் எம்.வி. கருப்பையா தற்காலிக பேரவைத் தலைவராக நியமிக்க ஆளுநர் ஒப்புதல் அளித்திருந்தார். அவருக்கு நேற்று மாலை ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இன்று காலை சரியாக 9:30 மணிக்குத் தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா தலைமையில் அவை கூடியது. 17-ஆவது பேரவையின் முதல் கூட்டம் என்பதால் பேரவை வளாகம் விழாக்கோலம் பூண்டிருந்தது.
முதலமைச்சர்ஜோசப் விஜய், நேற்று பதவியேற்பு விழாவிற்கு அணிந்து வந்தது போலவே இன்றும் 'கோட் சூட்' அணிந்து கம்பீரமாக அவைக்கு வருகை தந்தார். அவரைத் தொடர்ந்து திமுக, அதிமுக மற்றும் பிற கூட்டணிக் கட்சிகளின் உறுப்பினர்களும் அவைக்கு வந்தனர்.
அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு குழுவாகவும், எஸ்.பி. வேலுமணி தலைமையில் மற்றொரு குழுவாகவும் உறுப்பினர்கள் தனித்தனியாக அவைக்கு வந்தனர். இரு தலைவர்களும் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் தவிர்த்தது அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
தற்காலிக பேரவைத் தலைவரின் உரைக்குப் பிறகு, பதவிப் பிரமாண நிகழ்வு தொடங்கியது. முதலாவதாக, அவை முன்னவரும் முதலமைச்சருமான திரு. ச. ஜோசப் விஜய் எம்.எல்.ஏ-வாக உறுதிமொழி எடுத்துக்கொண்டார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் பிற கட்சி உறுப்பினர்கள் வரிசையாக வந்து பதவிப் பிரமாணம் செய்துகொண்டனர்.
அனைத்து உறுப்பினர்களும் பதவியேற்று முடித்த பின்னர், புதிய சபாநாயகர் மற்றும் துணைச் சபாநாயகர் தேர்தல் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

பிளஸ் 2 தேர்வில் சாதனை: மாணவிக்கு ஸ்கூட்டர் பரிசளித்த பி.டி. செல்வகுமார்!
திங்கள் 11, மே 2026 12:44:50 PM (IST)

முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்திக்க முதல்வர் விஜய் திட்டம்!
திங்கள் 11, மே 2026 12:24:01 PM (IST)

எடப்பாடி பழனிசாமிக்கு மரியாதையை செய்ய தவறினாரா விஜய்? சமூக வலைதளங்களில் வைரல்!
திங்கள் 11, மே 2026 12:01:56 PM (IST)

விஜய்யின் 200 யூனிட் இலவச மின்சாரம்: யாருக்கு லாபம்? யாருக்கு ஏமாற்றம்? - முழு விபரம்!
திங்கள் 11, மே 2026 11:24:51 AM (IST)

தூத்துக்குடி உள்பட 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்
திங்கள் 11, மே 2026 11:17:00 AM (IST)

குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குக : காவல்துறைக்கு முதலமைச்சர் விஜய் உத்தரவு!
திங்கள் 11, மே 2026 9:00:41 AM (IST)


