» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எடப்பாடி பழனிசாமிக்கு மரியாதையை செய்ய தவறினாரா விஜய்? சமூக வலைதளங்களில் வைரல்!

திங்கள் 11, மே 2026 12:01:56 PM (IST)



தமிழக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் விஜய் மரியாதை செய்ய தவறிவிட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது. 

தமிழகத்தில் 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர் இன்று(மே 11) காலை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், தமிழக சட்டப்பேரவைக்குப் புதிதாகத் தேர்வான உறுப்பினர்கள் எம்எல்ஏக்களாகப் பதவியேற்றனர். இடைக்கால அவைத் தலைவர் சோழவந்தான் கருப்பையா உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 

முதலில் முதல்வர் சி. ஜோசப் விஜய் பெரம்பூர் தொகுதி எம்எல்ஏவாகப் பதவியேற்றுக் கொண்டார். அவரைத் தொடர்ந்து அமைச்சர்களும் மற்ற உறுப்பினர்களும் பதவியேற்று வருகின்றனர். அதிமுகவில் இருந்து பிரிந்து விஜய்யின் தவெகவில் இணைந்த செங்கோட்டையன் தனது கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் இம்முறை தவெக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 

இந்த நிலையில், முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களின் பதவிப் பிரமாண ஏற்பு விழாவின்போது, ​​முதல்வர் விஜய் வெளிப்படுத்தும் எதிர்வினைகளை சமூக வலைதளங்களில் பரப்பி வருகின்றனர். குறிப்பாக எடப்பாடி பழனிசாமி பேரவையில் முதல்வர் விஜய்யை பார்த்து கைகூப்பி வணக்கம் செலுத்திபோது விஜய் அவருக்கு பதில் வணக்கம் செலுத்தவில்லை. இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory