» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடி புதிய பேருந்து நிலைய டாஸ்மாக் கடை மூடல் - பொதுமக்கள் வரவேற்பு!
புதன் 13, மே 2026 8:49:21 AM (IST)

தமிழகம் முழுவதும் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, தூத்துக்குடியில் பேருந்து நிலையம் அருகே இருந்த கடை நேற்று அதிரடியாக மூடப்பட்டது.
பொதுமக்களின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இருந்து 500 மீட்டர் சுற்றளவிற்குள் இருக்கும் 717 மதுபானக் கடைகளை இரண்டு வார காலத்திற்குள் மூட முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பு தமிழகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
முதலமைச்சரின் இந்த அதிரடி உத்தரவைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் சுமார் 45 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான பட்டியலை அதிகாரிகள் தயார் செய்துள்ளனர். இதன் முதற்கட்டமாக, தூத்துக்குடி புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரே நீண்ட காலமாகச் செயல்பட்டு வந்த டாஸ்மாக் கடை நேற்று மாலை அதிகாரிகளால் பூட்டி சீல் வைக்கப்பட்டது.
இது குறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறுகையில், "முதல்வரின் ஆணைக்கிணங்க பேருந்து நிலையம் அருகில் உள்ள கடை உடனடியாக மூடப்பட்டுள்ளது. இதேபோல் ஏற்கனவே கணக்கெடுக்கப்பட்டுள்ள மற்ற கடைகளும் அடுத்த 15 நாட்களுக்குள் படிப்படியாக மூடப்படும்," எனத் தெரிவித்தனர்.
பேருந்து நிலையம் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் மதுக்கடைகள் இருப்பதால் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழலும், தேவையற்ற சச்சரவுகளும் ஏற்பட்டு வந்தன. தற்போது இந்தக் கடை மூடப்பட்டுள்ளதால் பயணிகள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். அரசின் இந்தச் செயலை வரவேற்றுப் பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தமிழகத்தில் மே 28-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை: ஜமாத் உலமா சபை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ஞாயிறு 17, மே 2026 9:40:41 PM (IST)

விஜய் மீது பொறாமை? ஸ்டாலினை சந்தித்தது ஏன்? விமர்சனங்களுக்கு ரஜினி விளக்கம்!
ஞாயிறு 17, மே 2026 8:10:37 PM (IST)

திருச்செந்தூர் கோயிலில் பக்தர்கள் ஆவேசம்: இரும்பு கேட்டை உடைத்து உள்ளே நுழைந்ததால் பரபரப்பு!
ஞாயிறு 17, மே 2026 7:42:28 PM (IST)

மே 10 முதல் 200 யூனிட் இலவச மின்சாரம் கணக்கீடு: ஆட்டோ-டெபிட் வசதியும் அறிமுகம்!
ஞாயிறு 17, மே 2026 11:42:15 AM (IST)

குருவாயூர் எக்ஸ்பிரஸில் நகை வியாபாரியிடம் 1½ கிலோ தங்க நகைகள் கொள்ளை!
ஞாயிறு 17, மே 2026 11:33:58 AM (IST)

காதலன் கண்முன்னே கொடூரம்: கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 3 பேருக்கு 30 ஆண்டுகள் சிறை!
ஞாயிறு 17, மே 2026 11:04:00 AM (IST)


