» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன் ஆற்றில் குதித்து தற்கொலை! - திரையுலகினர் அதிர்ச்சி!
திங்கள் 18, மே 2026 10:31:06 AM (IST)
தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளரும், இயக்குநரும், துணிச்சலான மேடைப் பேச்சுகளால் தனி முத்திரை பதித்தவருமான கே. ராஜன் (வயது 85) நேற்று மாலை சென்னை அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஒட்டுமொத்தத் திரைத்துறையினரிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியில் வசித்து வந்த கே. ராஜன், நேற்று மாலை 4:30 மணியளவில் தனது ஓட்டுநர் தனசேகருடன் காரில் அடையாறு பகுதிக்குச் சென்றுள்ளார். கார் அடையாறு திரு.வி.க. பாலம் அருகே சென்று கொண்டிருந்தபோது, ஓட்டுநரிடம் காரை நிறுத்தச் சொல்லிவிட்டு, சிறிது தூரம் உலாவி வருவதாகக் கூறி கீழே இறங்கியுள்ளார். பாலத்தின் மீது நடந்து சென்ற அவர், யாரும் எதிர்பாராத விதமாகத் திடீரென அங்கிருந்து அடையாறு ஆற்றுக்குள் குதித்துள்ளார். இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் ஓட்டுநர் உடனடியாகக் காவல் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் கொடுத்தனர்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அடையாறு போலீசார் மற்றும் சைதாப்பேட்டை தீயணைப்புத் துறையினர் ஆற்றில் தீவிரத் தேடுதல் வேட்டை நடத்தி, மாலை 5:15 மணியளவில் கே. ராஜனின் உடலை மீட்டனர். பின்னர் அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. முதற்கட்ட விசாரணையில், கடந்த சில நாட்களாக அவர் குடும்பப் பிரச்சினை காரணமாக மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகக் கூறப்படும் நிலையில், அடையாறு போலீசார் இது குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
1980-களில் இருந்து தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராகப் பயணித்து வரும் கே. ராஜன், ‘தங்கமான தங்கச்சி’, ‘சின்னப் பூவை கிள்ளாதே’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்துள்ளார். மேலும் அஜித்தின் ‘துணிவு’, ‘பகாசூரன்’ உள்ளிட்ட 18-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்துள்ளார்.
சினிமா ஆடியோ வெளியீட்டு விழாக்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளில் தயாரிப்பாளர்களின் நஷ்டம் குறித்தும், நடிகர்களின் அதீத சம்பளம் குறித்தும் எதார்த்தமாகவும், வெளிப்படையாகவும், அச்சமின்றியும் பேசக்கூடிய அவரது தனித்துவமான பாணி சினிமா வட்டாரங்களில் பெரிதும் மதிக்கப்பட்டது. அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் குஷ்பு, விஷால், சரத்குமார் உள்ளிட்ட ஏராளமான திரைப்பிரபலங்கள் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மே 20-ல் வெளியாகிறது 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
திங்கள் 18, மே 2026 12:53:24 PM (IST)

மே 21-ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
திங்கள் 18, மே 2026 11:16:08 AM (IST)

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள் மூலம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளனர்! - மு.க.ஸ்டாலின் பேச்சு!
திங்கள் 18, மே 2026 10:46:00 AM (IST)

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகல்!
திங்கள் 18, மே 2026 10:35:35 AM (IST)

எடப்பாடியாருக்கு தூத்துக்குடி அதிமுக முழு ஆதரவு: எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் தீர்மானம்!
திங்கள் 18, மே 2026 10:11:13 AM (IST)

தமிழகத்தில் மே 28-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை: ஜமாத் உலமா சபை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ஞாயிறு 17, மே 2026 9:40:41 PM (IST)


