» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மே 20-ல் வெளியாகிறது 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்: அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு
திங்கள் 18, மே 2026 12:53:24 PM (IST)
தமிழகத்தில் சுமார் 10 லட்சம் மாணவர்கள் ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருக்கும் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (மே 20-ஆம் தேதி) புதன்கிழமை அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று தமிழக முதலமைச்சர் விஜய் தலைமையில், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தின் போது, தமிழ் ஆவணப் படங்கள் மற்றும் திரைத்துறை மேம்பாடு தொடர்பாக அரசிடம் அளிக்கப்பட்ட பல்வேறு கோரிக்கைகள் மற்றும் மனுக்கள் குறித்து, பள்ளிக்கல்வி மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை அமைச்சர் ராஜ்மோகனுடன் முதலமைச்சர் விஜய் அவர்கள் விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தைத் தொடர்ந்து, பள்ளிக்கல்வித்துறையின் புதிய உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக, தமிழக அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 1 முதல் 3-ஆம் வகுப்பு வரையிலான புதிய பாடப்புத்தகங்களை அமைச்சர் ராஜ்மோகன் வெளியிட்டார்.
புத்தக வெளியீட்டிற்குப் பின்னர், தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் கூறியதாவது: "தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடத்தி முடிக்கப்பட்ட 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விடைத்தாள் திருத்தும் பணிகள் 100% கச்சிதமாக நிறைவடைந்து, மதிப்பெண்கள் கணினியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதனையடுத்து, நாளை மறுநாள் வருகிற 20-05-2026 (புதன்கிழமை) காலை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் (10th Public Exam Results) முறைப்படி இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளன. மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டுத் தேர்வு முடிவுகளை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம். மேலும், மாணவர்களின் கைபேசி எண்களுக்கும் குறுஞ்செய்தி மூலம் முடிவுகள் அனுப்பி வைக்கப்படும்" என்று தெரிவித்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மே 21-ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்: ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
திங்கள் 18, மே 2026 11:16:08 AM (IST)

இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்கள் மூலம் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்துள்ளனர்! - மு.க.ஸ்டாலின் பேச்சு!
திங்கள் 18, மே 2026 10:46:00 AM (IST)

அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர் செம்மலை விலகல்!
திங்கள் 18, மே 2026 10:35:35 AM (IST)

பிரபல திரைப்பட தயாரிப்பாளர் கே. ராஜன் ஆற்றில் குதித்து தற்கொலை! - திரையுலகினர் அதிர்ச்சி!
திங்கள் 18, மே 2026 10:31:06 AM (IST)

எடப்பாடியாருக்கு தூத்துக்குடி அதிமுக முழு ஆதரவு: எஸ்.பி. சண்முகநாதன் தலைமையில் தீர்மானம்!
திங்கள் 18, மே 2026 10:11:13 AM (IST)

தமிழகத்தில் மே 28-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை: ஜமாத் உலமா சபை அதிகாரப்பூர்வ அறிவிப்பு!
ஞாயிறு 17, மே 2026 9:40:41 PM (IST)


