» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தென்மேற்கு பருவமழை ஜூன் 3 அல்லது 4-ல் துவங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
வியாழன் 28, மே 2026 8:19:11 PM (IST)
இந்த ஆண்டு கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் சில நாட்கள் தாமதம் ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அந்தமான் தீவுகளில் கடந்த மே 16-ஆம் தேதியே தென்மேற்கு பருவக்காற்று வழக்கம்போல் தொடங்கிவிட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த மே 26-ஆம் தேதியன்று கேரளாவில் பருவமழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கணிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அரபிக்கடலில் நிலவும் திடீர் காற்று சுழற்சி காரணமாக, தென்மேற்கு பருவக்காற்று கேரளாவை வந்தடைவதில் சாதகமற்ற சூழல் நிலவுகிறது.
வழக்கமாக ஆண்டுதோறும் ஜூன் 1-ஆம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். ஆனால், இந்த முறை நிலவும் தட்பவெப்ப மாற்றங்களால் வரும் ஜூன் 3 அல்லது 4-ஆம் தேதியை ஒட்டியே பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், இந்த ஆண்டின் பருவமழைத் தொடக்கம் ஆரம்பத்தில் தீவிரமாக இல்லாமல், சற்று வலு குறைந்து காணப்படும் என்று வானிலை ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை:
இதற்கிடையில், தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள வான்பகுதிகளின் மேல் நிலவி வரும் வளிமண்டல சுழற்சி காரணமாக, இன்று (வியாழக்கிழமை) தமிழகத்தின் பல பகுதிகளில் கோடைமழை நீடிக்க வாய்ப்புள்ளது.
குறிப்பாக, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் ஈரோடு ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. இது தவிர, தமிழ்நாட்டின் ஏனைய சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழையை எதிர்பார்க்கலாம் எனச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்.ஜே. சூர்யாவின் 'கில்லர்' படப்பிடிப்பில் தீவிபத்து: தொழில்நுட்ப வல்லுநர் பலி! – இருவர் கைது!
புதன் 3, ஜூன் 2026 5:33:18 PM (IST)

தவெக கூட்டணியில் காங்கிரசுக்கு மாநிலங்களவை எம்பி சீட்: முதல்வர் விஜய் அறிவிப்பு!
புதன் 3, ஜூன் 2026 5:03:40 PM (IST)

கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு: ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிரடி உத்தரவு!
புதன் 3, ஜூன் 2026 4:48:05 PM (IST)

விபத்தில் இறந்த சிங்கப்பூர் இன்ஜினியர் குடும்பத்திற்கு ரூ.1.33 கோடி இழப்பீடு: தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு!
புதன் 3, ஜூன் 2026 4:37:51 PM (IST)

காப்புக்காட்டில் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு 'இலக்கியச் செம்மல்' விருது!
புதன் 3, ஜூன் 2026 3:46:39 PM (IST)

தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் பதவியேற்பு: குற்றங்களைத் தடுக்க உறுதி!
புதன் 3, ஜூன் 2026 3:11:35 PM (IST)


