» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் ஆய்வு: ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிரடி உத்தரவு!
புதன் 3, ஜூன் 2026 4:48:05 PM (IST)

கன்னியாகுமரி சுற்றுலாதளங்களில் அனுமதியில்லாமல் அமைக்கப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் உத்தரவிட்டுள்ளார்.
உலகப் புகழ்பெற்ற சுற்றுலா மையமான கன்னியாகுமரிக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பயணிகளுக்குத் தேவையான அடிப்படை உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்து மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வுக்குப் பின் கன்னியாகுமரி நகராட்சி அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற அனைத்துத் துறை அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில், பல்வேறு முக்கிய அதிரடி உத்தரவுகளை அவர் பிறப்பித்தார். சுற்றுலாப் பகுதிகளில் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள கடைகள் மற்றும் ஆக்கிரமிப்புகளை உடனடியாக அப்புறப்படுத்தி, பொதுமக்களின் நடைபாதையினை முறைப்படுத்திட நகராட்சி ஆணையர் மற்றும் காவல் துறைக்கு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.
மேலும், பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்திற்குப் பயணிகள் செல்ல இடையூறாக இருக்கும் கடைகளை அகற்ற இந்து சமய அறநிலையத்துறைச் செயல் அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது. நகரத்தைச் சுத்தமாகப் பராமரிக்க ஆங்காங்கே போதிய குப்பைத் தொட்டிகளை வைக்கவும், தூய்மைப் பணிகளை மேற்கொள்ளத் தனியாகப் பணியாளர்களை நியமிக்கவும் நகராட்சி நிர்வாகத்திற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது.
கடற்கரைப் பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதைத் தடுக்க, மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் தலைமையில் சிறப்புச் சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா வாகனங்களை ஆய்வு செய்து, பிளாஸ்டிக் பொருட்கள் இருந்தால் அவற்றை அங்கேயே பறிமுதல் செய்யும் இந்த நடைமுறையை இன்னும் இரண்டு வாரங்களுக்குள் முழுமையாக அமலுக்குக் கொண்டு வர ஆட்சியர் உத்தரவிட்டார்.
சுற்றுலாப் பகுதிகளில் உள்ள அனைத்து உணவகங்களிலும் தரமான உணவுகள் வழங்கப்படுவதை உறுதி செய்து சான்றிதழ் வழங்க மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டது. சாலை ஓரங்களில் உள்ள நடமாடும் கடைகளைத் தீவிரமாகக் கண்காணித்து, அவர்களுக்கு எனத் தனி இடம் ஒதுக்கீடு செய்ய நகராட்சி ஆணையருக்கு உத்தரவிடப்பட்டது. மேலும், ஹோட்டல் தமிழ்நாடு நிறுவனத்தின் உணவு மற்றும் செயல்பாடுகள் குறித்துச் சுற்றுலாத்துறை அலுவலர் ஆய்வு நடத்தவும், மராமத்துப் பணிகளுக்கான திட்ட வரைவைத் தயாரிக்கப் பொறியாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.
திரிவேணி சங்கக் கடற்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் ஆழமான பகுதிக்குச் சென்று குளிப்பதைத் தவிர்க்கும் பொருட்டு, இரும்புத் தடுப்புக் கம்பிகள் அமைத்திட துறை சார்ந்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. முக்கிய இடங்களில் இரவு நேரங்களில் சட்டம்-ஒழுங்கைப் பலப்படுத்தவும், முழு கண்காணிப்பில் ஈடுபடவும் கன்னியாகுமரி துணைக் காவல் கண்காணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டது. அவசர மருத்துவ உதவிகளை உறுதி செய்யச் சுற்றுலாத் தலங்களில் மருத்துவக் குழுவினர் இருப்பதைச் சுகாதாரத்துறை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆட்சியர் குறிப்பிட்டார்.
ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை:
முன்னதாக, பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகப் படகு இல்லத்தில் சவாரி செய்ய வரிசையில் நின்றுகொண்டிருந்த சுற்றுலாப் பயணிகளிடம் மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப் நேரில் சென்று குறைகளைக் கேட்டறிந்தார். தொடர்ந்து, அங்குள்ள ஆவின் பாலகத்தில் திடீர் சோதனை நடத்தி, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த பால், தயிர், நெய், வெண்ணெய் மற்றும் ஐஸ்கிரீம் போன்ற பொருட்களின் தரம் மற்றும் காலாவதி தேதிகளை உத்தியோகப்பூர்வமாக ஆய்வு செய்தார்.
இந்த அதிரடி ஆய்வுகளின் போது, மாவட்டச் சுற்றுலா அலுவலர் காமராஜ், மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் ஜெயராம பாண்டியன், மாவட்டச் சுற்றுச்சூழல் அலுவலர் நெல்லை மணி, கன்னியாகுமரி துணைக் காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன், நகராட்சி ஆணையர் பட்டுசாமி, பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழக மக்கள் தொடர்பு அலுவலர்கள் சௌந்தபாண்டியன், விஸ்வநாதன், தமிழ்நாடு ஹோட்டல் மேலாளர் கார்த்திக், காவல் ஆய்வாளர் சுந்தரராஜபெருமாள் உட்படப் பல துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

எஸ்.ஜே. சூர்யாவின் 'கில்லர்' படப்பிடிப்பில் தீவிபத்து: தொழில்நுட்ப வல்லுநர் பலி! – இருவர் கைது!
புதன் 3, ஜூன் 2026 5:33:18 PM (IST)

தவெக கூட்டணியில் காங்கிரசுக்கு மாநிலங்களவை எம்பி சீட்: முதல்வர் விஜய் அறிவிப்பு!
புதன் 3, ஜூன் 2026 5:03:40 PM (IST)

விபத்தில் இறந்த சிங்கப்பூர் இன்ஜினியர் குடும்பத்திற்கு ரூ.1.33 கோடி இழப்பீடு: தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு!
புதன் 3, ஜூன் 2026 4:37:51 PM (IST)

காப்புக்காட்டில் முத்தாலங்குறிச்சி காமராசுவுக்கு 'இலக்கியச் செம்மல்' விருது!
புதன் 3, ஜூன் 2026 3:46:39 PM (IST)

தமிழகத்தின் புதிய டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் பதவியேற்பு: குற்றங்களைத் தடுக்க உறுதி!
புதன் 3, ஜூன் 2026 3:11:35 PM (IST)

தூத்துக்குடி அனல்மின் நிலைய ஒப்பந்தங்களுக்கு கமிஷனா? – சங்கப் பொருளாளர் மறுப்பு - முதல்வருக்கு கடிதம்!
புதன் 3, ஜூன் 2026 11:14:48 AM (IST)


