» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழகம் முழுவதும் 28 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: ஆளுநரின் செயலராக சஜ்ஜன்சிங் சவான் நியமனம்
புதன் 3, ஜூன் 2026 10:43:39 AM (IST)
தமிழக ஆளுநரின் செயலராக சஜ்ஜன்சிங் ஜெ.சவான் நியமனம் உட்பட 28 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, தலைமைச் செயலர் மு.சாய்குமார் நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது: சென்னை மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, உயர்கல்வித்துறை சிறப்பு செயலராகவும், அறிவியல் நகர துணைத்தலைவர் ஹர் சகாய் மீனா, நில சீர்திருத்த ஆணையராகவும், தமிழ்நாடு சிமென்ட் கழக மேலாண் இயக்குநர், அஜய் யாதவ், பால் உற்பத்தித்துறை ஆணையர் மற்றும், ஆவின் மேலாண் இயக்குநராகவும் மாற்றப்பட்டுள்ளனர்,
தமிழ்நாடு கிடங்கு நிறுவன மேலாண் இயக்குநர் ஜெ.விஜயாராணி, தோட்டக் கலைத்துறை இயக்குநராகவும், இப்பதவியில் இருந்த பி.குமரவேல்பாண்டியன், மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலராகவும், அரியலூர் முன்னாள் ஆட்சியர் பி.ரத்தினசாமி, தொழில்நுட்பக் கல்வி இயக்குநராகவும், திருநெல்வேலி முன்னாள் ஆட்சியர் ஆர்.சுகுமார், எழுதுபொருள் அச்சகத்துறை இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஆவின் மேலாண் இயக்குநர் மற்றும் பால் உற்பத்தி இயக்குநராக இருந்த ஏ.ஜான் லூயிஸ், தமிழ்நாடு கிடங்கு நிறுவன மேலாண் இயக்குநராகவும், சர்க்கரைத்துறை முன்னாள் இயக்குநர் டி.அன்பழகன், தமிழ்நாடு கடல்சார் வாரிய துணைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை முன்னாள் ஆட்சியர் ஜெ.யு.சந்திரகலா, தமிழ்நாடு சிமென்ட் நிறுவன மேலாண் இயக்குநராகவும், தொழில்நுட்பக் கல்வி இயக்குநராக இருந்த எஸ்.விசாகன், அறிவியல் நகர துணைத் தலைவராகவும், சென்னை மாநகராட்சி பணிகள் பிரிவு துணை ஆணையர் வி.சிவகிருஷ்ணமூர்த்தி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய இணை மேலாண் இயக்குநராகவும், நகராட்சி நிர்வாகத்துறை இணை ஆணையர் ஆர்.அனாமிகா, தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண் இயக்குநராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்ட முன்னாள் ஆட்சியர் ரஞ்ஜித் சிங், தென்காசி ஆட்சியராகவும், நாமக்கல் முன்னாள் ஆட்சியர் துர்கா மூர்த்தி, திண்டுக்கல் ஆட்சியராகவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை செயலர் சஜ்ஜன் சிங் ஆர்.சவான், ஆளுநரின் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல் மாவட்ட முன்னாள் ஆட்சியர் எஸ்.சரவணன், சென்னை மாநகராட்சி பணிகள் பிரிவு இணை ஆணையராகவும், சென்னை மாநகராட்சி வருவாய் மற்றும் நிதிப்பிரிவு துணை ஆணையர் எம்.பிரதிவிராஜ், கரூர் மாநகராட்சி ஆணையராகவும், எல்காட் செயல் இயக்குநர் வி.தீபனவிஷ்வேஸ்வரி, தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையராகவும் சிதம்பரம் சார் ஆட்சியர் எஸ்.கிஷன்குமார், கடலூர் மாநகராட்சி ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் 28 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போதைப்பொருட்களை வைத்திருந்த இளைஞர் கைது: போலீசாரை மிரட்டித் தற்கொலை முயற்சி!
சனி 13, ஜூன் 2026 8:17:56 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஜூன் மாத உண்டியல் வருமானம் ₹4.20 கோடி
சனி 13, ஜூன் 2026 8:12:13 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் வி.காந்திராஜ் ஆய்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 8:10:10 PM (IST)

ராஜினாமா செய்த 4 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ்: 7 நாளில் விளக்கம் அளிக்க சபாநாயகர் உத்தரவு
வெள்ளி 12, ஜூன் 2026 5:26:53 PM (IST)

திமுக அரசின் சாதனைகள் மீது சோஃபா மாடல் அரசு ஸ்டிக்கர் ஒட்டுகிறது: உதயநிதி ஸ்டாலின் காட்டம்!
வெள்ளி 12, ஜூன் 2026 4:19:26 PM (IST)

திமுக தோல்விக்கு அமைச்சர்களும், அதிகாரிகளுமே காரணம்? மு.க.ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல்!
வெள்ளி 12, ஜூன் 2026 4:00:12 PM (IST)


