» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் மறைவு: அதிர்ச்சியில் உறைந்தது தமிழ்த் திரையுலகம்!
சனி 27, ஜூன் 2026 10:18:09 AM (IST)
தமிழ்த் திரையுலகின் முன்னணி இயக்குநரும் நடிகருமான பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பு காரணமாகக் காலமானார். அவருக்கு வயது 73...
சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை தூக்கத்திலேயே ஏற்பட்ட திடீர் மாரடைப்பு காரணமாகப் பாக்யராஜ் மரணமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. உடல்நலக்குறைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.பாக்யராஜ் மறைந்த செய்தி அறிந்து தமிழ்த் திரையுலகினர், நடிகர்கள் மற்றும் ரசிகர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அண்மையில்தான் இவரது குருநாதரான மூத்த இயக்குநர் பாரதிராஜா வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார். அந்தச் சோகம் மறைவதற்குள், அவரது முதன்மை சீடரான மற்றொரு சிறந்த இயக்குநர் பாக்யராஜும் மரணமடைந்திருப்பது ஒட்டுமொத்த இந்தியத் திரையுலகிற்கும் ஈடுசெய்ய முடியாத மிகப்பெரிய இழப்பாகக் கருதப்படுகிறது.
மறைந்த பாக்யராஜுக்கு மனைவி பூர்ணிமா (முன்னாள் நடிகை), மகள் சரண்யா மற்றும் மகன் சாந்தனு (நடிகர்) ஆகியோர் உள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாடு முழுவதும் சமமான கல்வி வழங்க ராகுல் காந்தி புதிய இயக்கம்: காங்கிரஸ் தலைவர் பேட்டி
சனி 27, ஜூன் 2026 11:31:14 AM (IST)

பாக்யராஜ் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு : எடப்பாடி கே.பழனிசாமி இரங்கல்!
சனி 27, ஜூன் 2026 10:47:29 AM (IST)

தவெக பெண் நிர்வாகியிடம் செல்போன் பறிப்பு : மர்ம நபருக்கு போலீஸ் வலைவீச்சு!
சனி 27, ஜூன் 2026 10:42:16 AM (IST)

அண்ணாமலையின் இயக்கம் தேர்தலுக்குத் தயார் : தூத்துக்குடியில் கரு நாகராஜன் பேட்டி!
சனி 27, ஜூன் 2026 10:09:23 AM (IST)

தமிழக மக்களுக்கு தவெக அரசு செய்யும் துரோகம் : நயினார் நாகேந்திரன் சாடல்!
சனி 27, ஜூன் 2026 8:07:35 AM (IST)

தொழிலாளர் நல வாரிய ஓய்வூதியத்தை ரூ.5,000 ஆக உயர்த்த கோரிக்கை: சிஐடியு பேரவையில் தீர்மானம்!
வெள்ளி 26, ஜூன் 2026 5:45:49 PM (IST)


