» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

தொழிலாளர் நல வாரிய ஓய்வூதியத்தை ரூ.5,000 ஆக உயர்த்த கோரிக்கை: சிஐடியு பேரவையில் தீர்மானம்!

வெள்ளி 26, ஜூன் 2026 5:45:49 PM (IST)



தூத்துக்குடியில் நடைபெற்ற சிஐடியு மாவட்டக் குழு பேரவைக் கூட்டத்தில், புதிய மாவட்ட நிர்வாகிகளுக்கான தேர்தல் மற்றும் தொழிலாளர் நலன்களை வலியுறுத்திப் பல்வேறு முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தூத்துக்குடி சிஐடியு மாவட்டக் குழு அலுவலகத்தில் இன்று (ஜூன் 26) காலையில் மாவட்டப் பேரவைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ரவிதாகூர் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகி கந்தசாமி தொழிற்சங்கக் கொடியை ஏற்றி வைக்க, மற்றொரு நிர்வாகி தஸ்லீஸ் வரவேற்புரையாற்றினார். மறைந்த தோழர்களுக்கு முனீஸ்வரன் அஞ்சலி தீர்மானத்தை முன்மொழிந்தார்.

இதனைத் தொடர்ந்து, பேரவைக் கூட்டத்தை சிஐடியு மாவட்டத் தலைவர் பேச்சிமுத்து துவக்கி வைத்தார். கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் பெருமாள் வேலை அறிக்கையையும், மாவட்டப் பொருளாளர் சுப்புலட்சுமி வரவுசெலவு அறிக்கையையும் முன்வைத்தனர். உப்பு தொழிலாளர் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் மணவாளன் வாழ்த்திப் பேசினார். சிஐடியு மாநிலத் துணைத்தலைவர் ரசல் பேரவையை நிறைவு செய்து சிறப்புரையாற்றினார். இறுதியாக மாவட்ட நிர்வாகி பெஸ்டி நன்றியுரையாற்றினார்.

இப்பேரவைக் கூட்டத்தில் தூத்துக்குடி மாவட்ட சிஐடியு அமைப்பிற்கான புதிய நிர்வாகிகள் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டனர். அதன்படி, மாவட்டத் தலைவராக பெருமாள், மாவட்டச் செயலாளராக பேச்சிமுத்து, மாவட்டப் பொருளாளராக சுப்புலட்சுமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

மேலும், மாவட்டத் துணைத் தலைவர்களாக அந்தேரியாஸ், பாலு, தங்கராஜ், கந்தசாமி, பெஸ்டி, ஆக்னஸ், ராமலிங்கம் ஆகியோரும், துணைச் செயலாளர்களாக தஸ்லீஸ், முனீஸ்வரன், செல்வவள்ளி, ராமச்சந்திரன், ஸ்டெல்லா ஆகியோரும் புதிய நிர்வாகிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இக்கூட்டத்தில் உடல் உழைப்பு தொழிலாளர்கள் நல வாரியத்தை அரசு முறையாகச் செயல்படுத்த வேண்டும். ஆரம்பக் கல்வி முதல் உயர்கல்வி வரை உடல் உழைப்பு தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும்.

நல வாரியம் மூலம் தொழிலாளர்களுக்கு இலவச வீடு அல்லது வீடு கட்ட நிதி வழங்க வேண்டும். திருமண நிதியுதவியை ரூ.20,000 ஆகவும், விபத்து மரண இழப்பீட்டை ரூ.5 லட்சமாகவும், இயற்கை மரண இழப்பீட்டை ரூ.2 லட்சமாகவும் (கட்டுமான நலவாரியத்தைப் போல்) உயர்த்தி வழங்க வேண்டும்.

தீபாவளி போனஸாக நல வாரியமே நேரடியாக ரூ.5,000 வழங்க வேண்டும். தொழிலாளர்களுக்கான மாதாந்திர ஓய்வூதியத்தை ரூ.5,000 ஆக உயர்த்த வேண்டும். பெண்களுக்கு 55 வயதிலேயே ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் மற்றும் குடும்ப ஓய்வூதியத் தொகையை ரூ.2,500 ஆக நிர்ணயிக்க வேண்டும் என்று பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory