» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
சிகிச்சையில் இருந்த இளம்பெண் பலி: அமோனியா வாயு கசிவு விபத்து உயிரிழப்பு 14 ஆக உயர்வு!
வெள்ளி 26, ஜூன் 2026 3:45:57 PM (IST)
பெரியபாளையம் அருகே கடல் உணவுகளைப் பதப்படுத்தும் தனியார் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு விபத்தில் சிக்கி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம்பெண் இன்று உயிரிழந்தார். இதனால் இந்த விபத்தில் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே கன்னிகைப்பேர் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான, கடல் மீன் மற்றும் இறால்களைப் பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 230 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆலையில் 100 தொழிலாளர்கள் பணியில் இருந்தபோது, அங்கிருந்த அமோனியா வாயு தொட்டி சரியாக மூடப்படாததால் அதிலிருந்து திடீரென வாயு கசிவு ஏற்பட்டுத் தீப்பிடித்தது. இந்த நச்சு வாயுக் கசிவின் காரணமாக, அங்கு பணியில் இருந்த 60 பெண் தொழிலாளர்கள் உட்பட 65-க்கும் மேற்பட்டோருக்குக் காது வழியாக ரத்தக்கசிவு ஏற்பட்டதுடன், உடலில் சிறு கொப்புளங்கள் ஏற்பட்டுப் படுகாயமடைந்தனர்.
பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மஞ்சங்காரணை, செங்குன்றம் பகுதிகளில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும், மேல் சிகிச்சைக்காகச் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டனர்.
ஏற்கனவே சிகிச்சை பலனின்றி 13 பேர் உயிரிழந்திருந்த நிலையில், சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பிரித்தி தேவி (வயது 29) என்ற இளம்பெண் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனால் தற்போதைய பலி எண்ணிக்கை 14 ஆக மாறியுள்ளது.
பலியானவர்களில் இதுவரை 10 பேரின் சடலங்கள் உடற்கூறாய்வுக்குப் பின் அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இன்று உயிரிழந்த பிரித்தி தேவி உட்பட மீதமுள்ள 4 பேரின் சடலங்கள், உரிய ஆவண சரிபார்ப்புகளுக்குப் பிறகு விரைவில் அவர்களின் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எனச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தொழிலாளர் நல வாரிய ஓய்வூதியத்தை ரூ.5,000 ஆக உயர்த்த கோரிக்கை: சிஐடியு பேரவையில் தீர்மானம்!
வெள்ளி 26, ஜூன் 2026 5:45:49 PM (IST)

திமுக ஊழல் பட்டியல்: தவெக அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்த அண்ணாமலை!
வெள்ளி 26, ஜூன் 2026 5:33:39 PM (IST)

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியா?: மு.க.ஸ்டாலின் பதில்!
வெள்ளி 26, ஜூன் 2026 5:16:32 PM (IST)

கரன்சி டிரேடிங் பெயரில் ரூ.24.64 லட்சம் மோசடி: இருவர் கைது - ரூ.3 லட்சம் மீட்பு!
வெள்ளி 26, ஜூன் 2026 5:06:22 PM (IST)

தூய்மைப் பணிகளைத் தனியார்மயமாக்கும் ஆய்வு டெண்டர் ரத்து: தமிழ்நாடு அரசு உத்தரவு!
வெள்ளி 26, ஜூன் 2026 3:55:22 PM (IST)

சென்னை மாநகராட்சியில் ரூ. 284 கோடி மதிப்பிலான 35 டெண்டர்கள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
வெள்ளி 26, ஜூன் 2026 3:21:30 PM (IST)


