» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கரன்சி டிரேடிங் பெயரில் ரூ.24.64 லட்சம் மோசடி: இருவர் கைது - ரூ.3 லட்சம் மீட்பு!
வெள்ளி 26, ஜூன் 2026 5:06:22 PM (IST)

இன்டர்நேஷனல் கரன்சி டிரேடிங் மூலம் அதிக லாபம் பெற்றுத் தருவதாகக் கூறி தூத்துக்குடியைச் சேர்ந்த ஒருவரிடம் ரூ.24.64 லட்சம் மோசடி செய்த இரண்டு பேரைச் சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு முகநூல் (Facebook) மூலம் அறிமுகமான நபர்கள், 'xs Markets' என்ற இணையதளத்தில் சர்வதேச கரன்சி வர்த்தகம் செய்தால் குறுகிய காலத்தில் அதிக லாபம் சம்பாதிக்கலாம் என ஆசைவார்த்தை கூறியுள்ளனர். இதனை நம்பிய பாதிக்கப்பட்ட நபர், பல்வேறு தவணைகளாக மொத்தம் ரூ.24,64,800 பணத்தை அந்த நபர்கள் குறிப்பிட்ட வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு அனுப்பியுள்ளார்.
ஆனால், பணம் அனுப்பிய பிறகு லாபத் தொகையோ அல்லது அசல் தொகையோ திரும்பக் கிடைக்காததால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், தூத்துக்குடி சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்தார். இப்புகாரின் பேரில் சைபர் குற்றப்பிரிவு ஆய்வாளர் சாந்தி வழக்குப்பதிவு செய்து, பணப் பரிவர்த்தனை நடந்த வங்கிக் கணக்குகள் மற்றும் செல்போன் எண்களைக் கொண்டு தீவிர விசாரணை நடத்தினார்.
விசாரணையின் அடிப்படையில், இந்த மோசடியில் ஈடுபட்ட திருப்பூர் மாவட்டம் அவிநாசியைச் சேர்ந்த விவேக்ராஜா (33) மற்றும் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தைச் சேர்ந்த பரேஷ்குமார் (30) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து முதற்கட்டமாக ரூ.3 லட்சம் பணத்தைப் போலீசார் மீட்டுப் பாதிக்கப்பட்டவரிடம் ஒப்படைத்தனர். மேலும், இந்த ஆன்லைன் மோசடி கும்பலின் பின்னணி குறித்துச் சைபர் குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தொழிலாளர் நல வாரிய ஓய்வூதியத்தை ரூ.5,000 ஆக உயர்த்த கோரிக்கை: சிஐடியு பேரவையில் தீர்மானம்!
வெள்ளி 26, ஜூன் 2026 5:45:49 PM (IST)

திமுக ஊழல் பட்டியல்: தவெக அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்த அண்ணாமலை!
வெள்ளி 26, ஜூன் 2026 5:33:39 PM (IST)

திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியா?: மு.க.ஸ்டாலின் பதில்!
வெள்ளி 26, ஜூன் 2026 5:16:32 PM (IST)

தூய்மைப் பணிகளைத் தனியார்மயமாக்கும் ஆய்வு டெண்டர் ரத்து: தமிழ்நாடு அரசு உத்தரவு!
வெள்ளி 26, ஜூன் 2026 3:55:22 PM (IST)

சிகிச்சையில் இருந்த இளம்பெண் பலி: அமோனியா வாயு கசிவு விபத்து உயிரிழப்பு 14 ஆக உயர்வு!
வெள்ளி 26, ஜூன் 2026 3:45:57 PM (IST)

சென்னை மாநகராட்சியில் ரூ. 284 கோடி மதிப்பிலான 35 டெண்டர்கள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
வெள்ளி 26, ஜூன் 2026 3:21:30 PM (IST)


