» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியா?: மு.க.ஸ்டாலின் பதில்!
வெள்ளி 26, ஜூன் 2026 5:16:32 PM (IST)
திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவது குறித்து இன்னும் இறுதி முடிவு செய்யப்படவில்லை என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை, விரைவில் நடைபெறவுள்ள திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வைக்க திமுக மூத்த நிர்வாகிகள் மற்றும் மாவட்ட அமைப்பாளர்கள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.சட்டசபை எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் காலியாக உள்ள திருச்சி கிழக்கு உட்பட 6 தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ளது.
திருச்சி கிழக்கு தொகுதியானது தற்போதைய முதல்வர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதியாகும். அவர் பெரம்பூர் தொகுதியிலும் வெற்றி பெற்றிருந்ததால், தனது திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (எம்.எல்.ஏ) பதவியை முறைப்படி ராஜினாமா செய்தார். இதனால் காலியான இத்தொகுதியில், மு.க.ஸ்டாலினைப் போட்டியிடச் செய்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்பது திமுகவினரின் திட்டமாக உள்ளது.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து காரில் வீடு திரும்பிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம், திருச்சி கிழக்கு தொகுதியில் போட்டியிடுவது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், இப்போட்டி குறித்து மறுப்பு ஏதும் தெரிவிக்காமல், "இன்னும் முடிவு செய்யப்படவில்லை" என்று சுருக்கமாகத் தெரிவித்தார்.
இந்தத் தகவலால், திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மு.க.ஸ்டாலின் களம் இறங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தொழிலாளர் நல வாரிய ஓய்வூதியத்தை ரூ.5,000 ஆக உயர்த்த கோரிக்கை: சிஐடியு பேரவையில் தீர்மானம்!
வெள்ளி 26, ஜூன் 2026 5:45:49 PM (IST)

திமுக ஊழல் பட்டியல்: தவெக அரசின் கவனத்திற்குக் கொண்டு வந்த அண்ணாமலை!
வெள்ளி 26, ஜூன் 2026 5:33:39 PM (IST)

கரன்சி டிரேடிங் பெயரில் ரூ.24.64 லட்சம் மோசடி: இருவர் கைது - ரூ.3 லட்சம் மீட்பு!
வெள்ளி 26, ஜூன் 2026 5:06:22 PM (IST)

தூய்மைப் பணிகளைத் தனியார்மயமாக்கும் ஆய்வு டெண்டர் ரத்து: தமிழ்நாடு அரசு உத்தரவு!
வெள்ளி 26, ஜூன் 2026 3:55:22 PM (IST)

சிகிச்சையில் இருந்த இளம்பெண் பலி: அமோனியா வாயு கசிவு விபத்து உயிரிழப்பு 14 ஆக உயர்வு!
வெள்ளி 26, ஜூன் 2026 3:45:57 PM (IST)

சென்னை மாநகராட்சியில் ரூ. 284 கோடி மதிப்பிலான 35 டெண்டர்கள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
வெள்ளி 26, ஜூன் 2026 3:21:30 PM (IST)


