» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

விஜய் இருக்கும் வரை இனி யாரும் ஆளுங்கட்சியாக வர முடியாது: செங்கோட்டையன் சவால்.

வெள்ளி 26, ஜூன் 2026 12:53:13 PM (IST)



"யாராக இருந்தாலும் இனி வரும் காலங்களில் எதிர்க்கட்சி வரிசையில் மட்டும்தான் அமர முடியும். முதலமைச்சர் விஜய் இருக்கும் வரை வேறு யாராலும் ஆளுங்கட்சியாக வர முடியாது" என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

கோபியில் நடைபெற்ற பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன், "இன்று ஜோசப் விஜய் என்று சொன்னாலே எதிர்த்தரப்பினர் அனைவரும் நடுங்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்தத் தொகுதியில் என்னை 10 முறை வெற்றி பெற வைத்து, என்னை வாழ வைத்தவர்கள் இங்கு கூடியிருக்கும் பொதுமக்களாகிய நீங்கள்தான்" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

தொடர்ந்து தனது அரசியல் பயணம் குறித்துப் பேசிய அவர், "செங்கோட்டையன் எங்கே செல்கிறார் என்று ஆரம்பத்தில் எல்லாரும் என்னைக் கேலி பேசினார்கள். நான் எம்ஜிஆருடன் பயணம் செய்தேன், அவர் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார். நான் ஜெயலலிதாவோடு பயணம் செய்தேன், அவரும் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தார். இப்போது விஜய்யுடன் இணைந்தேன், இன்றும் ஆட்சி மாற்றப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக, 60 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர்கள் இப்போது எதிர்க்கட்சி வரிசையில் போய் அமர்ந்துள்ளார்கள்" என்றார்.

மேலும், "யாராக இருந்தாலும் இனி வரும் காலங்களில் எதிர்க்கட்சி வரிசையில் மட்டும்தான் அமர முடியும். முதலமைச்சர் விஜய் இருக்கும் வரை வேறு யாராலும் ஆளுங்கட்சியாக வர முடியாது. எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்குப் பிறகு உலகத் தமிழர்களின் இதயங்களில் வாழ்பவராக விஜய் விளங்குகிறார். தற்போது மாநிலம் கடுமையான நிதி நெருக்கடியில் இருந்தாலும் கூட, மக்களுக்காகப் பல்வேறு நலத்திட்டங்களைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறார் முதலமைச்சர் விஜய்" என்று செங்கோட்டையன் பெருமிதத்துடன் பேசினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory