» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பேருந்துகள் நிற்பதே இல்லை; எதற்கு நிழற்குடை? கனிமொழி எம்பியுடன் பெண்கள் வாக்குவாதம்!
வெள்ளி 26, ஜூன் 2026 11:05:20 AM (IST)
காயல்பட்டினம் நகராட்சிப் பகுதியில் புதிய பேருந்து நிழற்குடையைத் திறந்து வைக்கச் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியிடம், அப்பகுதியில் பேருந்துகள் நிற்பதில்லை என்று கூறி உள்ளூர் பெண்கள் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் நகராட்சிக்குட்பட்ட ஓடக்கரை பகுதியில் புதிதாகப் பேருந்து நிழற்குடை ஒன்று அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, புதிய பேருந்து நிழற்குடையைத் திறந்து வைத்தார்.
திறப்பு விழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோதே அங்குத் திரண்ட அப்பகுதி பெண்கள், கனிமொழியை முற்றுகையிட்டுப் பேசினர். "இந்த ஓடக்கரை பகுதியில் அரசுப் பேருந்துகள் எவையுமே நிற்பதே இல்லை. பேருந்துகள் நிறுத்தப்படாத இந்த இடத்தில் எதற்காகப் புதிய நிழற்குடை அமைக்கப்பட்டது?" என அவர்கள் அதிரடியாகக் கேள்வி எழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த கனிமொழி, "திமுக ஆட்சியாக இருந்தால் பேருந்துகள் கண்டிப்பாக இங்கு நின்று சென்றிருக்கும்" என்று கூறினார். கனிமொழியின் இந்த பதிலால் மேலும் ஆத்திரமடைந்த பெண்கள், திமுக ஆட்சியிலும் கூட இந்த இடத்தில் பேருந்துகள் நிற்கவில்லை என்று கூறி அவருடன் காரசாரமாக வாதிட்டனர். பெண்களின் இந்த திடீர் கேள்விகளாலும் தொடர் வாக்குவாதத்தாலும் அப்பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

இரவு நேரத்தில் தெருவிளக்குகள் எரிவதை உறுதி செய்ய வேண்டும்: ஆட்சியர் உத்தரவு
வெள்ளி 26, ஜூன் 2026 12:08:54 PM (IST)

எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் நேரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!
வெள்ளி 26, ஜூன் 2026 10:42:25 AM (IST)

அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு புதிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்: ஜூலை 1ல் அமல்!
வெள்ளி 26, ஜூன் 2026 10:33:44 AM (IST)

சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு மாரத்தான் : மக்களோடு மக்களாக ஓடிய முதல்வர் விஜய்!
வெள்ளி 26, ஜூன் 2026 10:21:55 AM (IST)

போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி : அமைச்சர் மதன் ராஜா கொடியசைத்துத் துவக்கம்!
வெள்ளி 26, ஜூன் 2026 10:14:28 AM (IST)

தூத்துக்குடியில் ஜூன் 28இல் மாவட்ட அளவிலான செஸ் போட்டி: ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!
வெள்ளி 26, ஜூன் 2026 9:02:12 AM (IST)


