» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் நேரத்தில் மாற்றம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு!

வெள்ளி 26, ஜூன் 2026 10:42:25 AM (IST)

நெல்லை ரயில் பணிமனையில் நடைபெறவுள்ள அவசரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக, சென்னை எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் ரயில் சேவைகளின் நேரத்தில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

புதிய நேர விபரங்கள்:

எழும்பூர் - நாகர்கோவில் வந்தே பாரத் (வண்டி எண்: 20627): சென்னை எழும்பூரில் இருந்து வருகிற ஜூன் 30ஆம் தேதி காலை 5:00 மணிக்கு வழக்கம் போல் புறப்படுவதற்குப் பதிலாக, 45 நிமிடங்கள் தாமதமாகக் காலை 5:45 மணிக்குக் புறப்பட்டு நாகர்கோவில் செல்லும்.

நாகர்கோவில் - எழும்பூர் வந்தே பாரத் (வண்டி எண்: 20628): நாகர்கோவிலில் இருந்து வருகிற ஜூன் 30ஆம் தேதி மதியம் 2:20 மணிக்கு வழக்கம் போல் புறப்படுவதற்குப் பதிலாக, 1 மணி நேரம் 10 நிமிடங்கள் தாமதமாக மாலை 3:30 மணிக்குக் புறப்பட்டு சென்னை எழும்பூர் வந்தடையும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory