» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி : அமைச்சர் மதன் ராஜா கொடியசைத்துத் துவக்கம்!

வெள்ளி 26, ஜூன் 2026 10:14:28 AM (IST)



தூத்துக்குடியில் "ஸ்டார்ட் ரன், ஸ்டாப் டிரக்ஸ்" விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தை அமைச்சர் மதன் ராஜா கொடியசைத்துத் துவக்கி வைத்தார். 

தமிழ்நாட்டைப் போதை இல்லாத மாநிலமாக மாற்றுவதை வலியுறுத்தி, தூத்துக்குடியில் மாணவ, மாணவிகள் பங்கேற்ற "ஸ்டார்ட் ரன், ஸ்டாப் டிரக்ஸ்" விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டத்தைக் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா, மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். 

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டரங்கில் இன்று (26.06.2026) போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. "தமிழ்நாட்டைப் போதை இல்லாத மாநிலமாக மாற்ற நாம் ஒன்றிணைவோம்" என்ற முக்கியக் கருப்பொருளை மையமாகக் கொண்டு இப்போட்டி ஒருங்கிணைக்கப்பட்டது.

இம்மாபெரும் விழிப்புணர்வு ஓட்டத்தைக் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் மதன் ராஜா, மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் கொடியசைத்துத் துவக்கி வைத்தார். இப்போட்டியில் ஏராளமான மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டு ஓடினர்.

இந்நிகழ்வின் போது தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் சிப்ரியங்கா, மாவட்ட வருவாய் அலுவலர் குருச்சந்திரன் உள்ளிட்ட அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் முக்கியப் பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory