» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மாற்றுத்திறனாளி வீரர்களுக்கு தனி விளையாட்டு அரங்கம்: ஆட்சியரிடம் கோரிக்கை மனு!
திங்கள் 6, ஜூலை 2026 3:30:41 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் சிறப்பாகப் பயிற்சி பெறத் தனி உள்விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள் சிறப்பாகப் பயிற்சி பெறத் தனி உள்விளையாட்டு அரங்கம் மற்றும் பிரத்யேக வசதிகள் செய்து தரக் கோரி, தூத்துக்குடி சிறப்புத் திறனாளிகளின் பாரா விளையாட்டுச் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
அம்மனுவில், தடகளம், அமர்வு கைப்பந்து, பளுதூக்குதல் உள்ளிட்ட போட்டிகளில் மாவட்ட வீரர்கள் தேசிய அளவில் சாதித்து வருவதால், அவர்களுக்கெனத் தனி உள்விளையாட்டு அரங்கம், உடற்பயிற்சிக் கூடம் மற்றும் பிரத்யேக ஆடுகளங்களை அமைக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.
மேலும், விவசாயிகள் மற்றும் மீனவர்களைப் போல மாற்றுத்திறனாளிகளுக்கும் தனியாகக் குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடத்த வேண்டும் என்றும், முதலமைச்சர் கோப்பை போட்டிகளில் 'அமர்வு கைப்பந்து' விளையாட்டை இணைக்க விளையாட்டுத் துறை (SDAT) அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு குறைதீர்க்கும் நாள் : ரூ.2.79 இலட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகள்
திங்கள் 6, ஜூலை 2026 5:51:33 PM (IST)

த.வெ.க. ஆட்சியைக் கவிழ்க்க திமுக ரூ.50 கோடி பேரம் : எம்.எல்.ஏ பரபரப்பு குற்றச்சாட்டு!
திங்கள் 6, ஜூலை 2026 5:34:31 PM (IST)

தவெக அரசு தமிழகத்திற்கு நல்லது செய்தால் வரவேற்போம்: அண்ணாமலை விளக்கம்!
திங்கள் 6, ஜூலை 2026 5:17:54 PM (IST)

மேகேதாட்டுவில் ஒரு செங்கல்லைக் கூட வைக்க விடமாட்டோம்: தமிழ்நாடு காங்கிரஸ் தீர்மானம்!
திங்கள் 6, ஜூலை 2026 4:44:03 PM (IST)

திருச்செந்தூர் கோயில் சேவைக் கட்டண உயர்வு: கருத்து தெரிவிக்க ஜூலை 21 வரை அவகாசம் நீட்டிப்பு!
திங்கள் 6, ஜூலை 2026 4:01:49 PM (IST)

கன்னியாகுமரி புதிய டிஎஸ்பி பிரகாஷ் பொறுப்பேற்பு!
திங்கள் 6, ஜூலை 2026 3:48:24 PM (IST)


