» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காதல் திருமணம் செய்த இளம்பெண் மர்ம மரணம்: கணவர், மாமியார் மீது பெற்றோர் புகார்!
செவ்வாய் 7, ஜூலை 2026 10:40:59 AM (IST)
தூத்துக்குடியில் கணவர் மற்றும் மாமியாரின் தொந்தரவு காரணமாக இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி பிரையண்ட் நகர் 12-வது தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன்மகன் மீனாட்சி சுந்தரம் (26). இவர் கடந்த 2023-ஆம் ஆண்டு தூத்துக்குடி மகிழ்ச்சிபுரத்தைச் சேர்ந்த மாரிமுத்துவின் மகள் மகாலட்சுமி (21) என்பவரைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார்.
இந்தத் தம்பதியருக்கு தற்போது ஒன்றரை வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. திருமணத்திற்குப் பின்பு மகாலட்சுமி தனது மாமியார் குடும்பத்துடன் கூட்டுக்குடும்பமாகச் சேர்ந்து வாழ்ந்து வந்தார். இச்சூழலில், கடந்த சில நாட்களாகக் கணவன் மனைவிக்கும் இடையே சிறு சிறு குடும்பச் சண்டைகள் தொடர்ந்து வந்துள்ளன.
இதற்கிடையே கணவர் மீனாட்சி சுந்தரம் மற்றும் மாமியார் ஆகிய இருவரும் மகாலட்சுமியைக் கடுமையாக டார்ச்சர் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த மகாலட்சுமி, தனது படுக்கையறையின் கதவை உள்பக்கமாகப் பூட்டிக்கொண்டு, மின்விசிறியில் சேலையால் தூக்குப்போட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த மாமியார் கதவைத் தட்டியுள்ளார். உள்ளே இருந்து எவ்வித பதிலும் வராததால், அவரது கணவர் மீனாட்சி சுந்தரம் படுக்கையறை கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மகாலட்சுமி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் காணப்பட்டார். இச்சம்பவம் குறித்துத் தென்பாகம் காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் மகாலட்சுமியின் உடலைக் கைப்பற்றி, பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனிடையே மகாலட்சுமியின் தாயார் சுப்புலட்சுமி அளித்த புகாரில், "எனது மகள் மாமியார் மற்றும் கணவர் கொடுத்த டார்ச்சரைத் தாங்க முடியாமல் இறந்துவிட்டாள். அவளது சாவில் பெரும் மர்மம் இருக்கிறது" என்று தெரிவித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் திருமுருகன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும், இறந்த மகாலட்சுமிக்குத் திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால், கோட்டாட்சியர் மேல் விசாரணை நடத்தி வருகிறார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் திஷா குழு ஆய்வுக் கூட்டம்: கனிமொழி எம்.பி. தலைமையில் அரசு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை!
சனி 11, ஜூலை 2026 8:45:47 PM (IST)

அரசு வழக்கறிஞர்கள் நியமன விவகாரம்: தவெக குற்றச்சாட்டுக்குக் கனிமொழி எம்.பி. பதிலடி!
சனி 11, ஜூலை 2026 8:19:18 PM (IST)

கரூர் 3,084 ஏக்கர் நில விவகாரம் : தமிழக அரசுக்கு அண்ணாமலை ஆதரவு
சனி 11, ஜூலை 2026 5:26:04 PM (IST)

குமரி மாவட்ட சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சர் ராஜேஷ் குமார் ஆய்வு
சனி 11, ஜூலை 2026 5:03:29 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி., - பெல்ஜியம் ஆண்ட்வெர்ப் துறைமுகங்கள் இடையே சர்வதேச ஒப்பந்தம்!
சனி 11, ஜூலை 2026 4:28:30 PM (IST)

மது போதையில் சாலையில் கிடந்த இளம்பெண், வாலிபர் : போலீசார் விசாரணை!
சனி 11, ஜூலை 2026 3:35:23 PM (IST)



உள்ளJul 7, 2026 - 04:28:30 PM | Posted IP 104.2*****