» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் ஆய்வு
செவ்வாய் 7, ஜூலை 2026 12:44:21 PM (IST)

மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் ஆய்வு மேற்கொண்டார்.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தினை மாவட்ட ஆட்சியர் மு.பிரதாப், தலைமையில் குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் தாரகை கத்பர்ட் முன்னிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் தெரிவிக்கையில்- கணினிமயமாக்கப்பட்ட தானியங்கி சேவையானது கடந்த 22.06.2026 முதல் மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகம் உள்ளிட்ட தமிழ்நாட்டிற்குட்பட்ட 10 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தேர்வுதளம் முழுவதும் சென்ஸ்சார்கள் மூலம் கண்காணிக்கப்பட்டு தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படுவதால் மழைபெய்யும் நேரங்கள், பலத்தக்காற்று மற்றும் ஏதேனும் சில தடங்கல்கள் ஏற்பட்டால், தேர்வர்கள் வாகனத்தை நன்றாக இயக்கினாலும், தேர்வு முடிவு தோல்வி எனவும், விண்ணப்பதாரர் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர ஓட்டுநர் உரிம தேர்வுக்கு ஆஜராகி, தேர்வில் இருசக்கர வாகனத் தேர்வில் தேர்ச்சி பெற்று நான்கு சக்கர வாகன தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால், தேர்வு முடிக்கப்பட்டு புகைப்படம் எடுக்க முடிவதில்லை. மீண்டும் இருசக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டுநர் உரிம தேர்வில் தேர்ச்சி பெறும் வரை ஓட்ட வேண்டிய சூழ்நிலை உள்ளது.
மேலும் தேர்வின் துவக்க நிலையிலேயே, தோல்வி அடைந்தாலும், அதன் சுழற்சி முடியும் வரை வாகனத்தை இயக்கிய பிறகே, தோல்வி என்ற முடிவு தெரியவருகிறது. இதனால், ஒரு விண்ணப்பதாரர் அதிக நேரம் எடுத்துக்கொள்ள வேண்டிய சூழ்நிலை உள்ளது. இந்த தானியங்கி தளத்தின் ஒரு சுழற்சியில் ஒரு விண்ணப்பதாரருக்கு மேல், தேர்வில் கலந்து கொள்ள முடிவதில்லை. இதனால், ஒரு விண்ணப்பதாரரின் சுழற்சி முடியும் வரை மற்றொரு விண்ணப்பதாரர் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது.
நான்கு சக்கர தேர்வின் போது H Section மற்றும் தளத்தின் Gradient பகுதி (Slope Area) ஆகிய இடங்களில் Long Wheel base கொண்ட பெரிய நான்கு சக்கர வாகனங்களை தேர்வுக்கு பயன்படுத்துவதில் மிகவும் சிரமமாக உள்ளது. மேலும், பயன்படுத்தப்பட்டாலும் தேர்வு முடிவுகள் தோல்வி என தீர்மானிக்கப்படுகிறது. இரு சக்கர வாகனத் தேர்வில் 8 வடிவ தளத்தில் தேர்வர்கள் கால்களை தளத்தில் ஊன்றுவது மற்றும் சமநிலை தவறி கீழே விழுவது ஆகியவற்றை சென்ஸ்சார்கள் கண்டறிவதில்லை. இருப்பினும், Manual ஆக தேர்வு முடிவு 'தோல்வி' என அறிவிக்கப்படுகிறது என பல்வேறு சிரமங்களை வாகன உரிமம் பெற வரும் பொதுமக்கள் சந்தித்து வருகிறார்கள்.
மேலும் இயற்கை காரணிகளால், சென்ஸ்சார்கள் பழுதடைந்தால் அதை சரிசெய்ய பொதுமக்கள் நீண்ட நேரமாக காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, மழைபெய்யும் நேரங்கள் சென்ஸ்சார்கள் சரிவர இயங்குவதில்லை. இதனை சரிசெய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் தேவைப்படுகிறது. எனவே புதிதாக வாகன ஓட்டுநர் உரிமம் பெற வரும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்கள் இருப்பதாக மாவட்ட நிர்வாகத்திடமும், என்னிடத்திலும், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் அவர்களிடத்திலும் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
முன்வைத்த அனைத்து கோரிக்கையினையும் போக்குவரத்து துறை ஆணையர் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு சுற்றுலாத்துறை அமைச்சர் செ.ராஜேஷ் குமார் தெரிவித்தார். ஆய்வில் கல்குளம் வட்டாட்சியர் ராஜேஷ், துறை அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் திஷா குழு ஆய்வுக் கூட்டம்: கனிமொழி எம்.பி. தலைமையில் அரசு நலத்திட்டங்கள் குறித்து ஆலோசனை!
சனி 11, ஜூலை 2026 8:45:47 PM (IST)

அரசு வழக்கறிஞர்கள் நியமன விவகாரம்: தவெக குற்றச்சாட்டுக்குக் கனிமொழி எம்.பி. பதிலடி!
சனி 11, ஜூலை 2026 8:19:18 PM (IST)

கரூர் 3,084 ஏக்கர் நில விவகாரம் : தமிழக அரசுக்கு அண்ணாமலை ஆதரவு
சனி 11, ஜூலை 2026 5:26:04 PM (IST)

குமரி மாவட்ட சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த நடவடிக்கை: அமைச்சர் ராஜேஷ் குமார் ஆய்வு
சனி 11, ஜூலை 2026 5:03:29 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி., - பெல்ஜியம் ஆண்ட்வெர்ப் துறைமுகங்கள் இடையே சர்வதேச ஒப்பந்தம்!
சனி 11, ஜூலை 2026 4:28:30 PM (IST)

மது போதையில் சாலையில் கிடந்த இளம்பெண், வாலிபர் : போலீசார் விசாரணை!
சனி 11, ஜூலை 2026 3:35:23 PM (IST)


