» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கல்விக் கட்டண விவரங்களை விளம்பரப் பலகையில் வெளியிடுவது கட்டாயம்: உயர் நீதிமன்றம் அதிரடி!
வியாழன் 9, ஜூலை 2026 11:56:54 AM (IST)
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளும் அரசு நிர்ணயித்துள்ள கல்விக் கட்டண விவரங்களைப் பள்ளிகளின் விளம்பரப் பலகைகளிலும், இணையதளங்களிலும் கட்டாயம் வெளியிட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்துத் தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்இ மற்றும் பிற வாரியப் பள்ளிகள் தங்களது கல்விக் கட்டண விவரங்களை விளம்பரப் பலகையில் வெளியிட வேண்டும் என மாநில தகவல் ஆணையத்தின் உத்தரவின்படி தனியார் பள்ளிகள் இயக்குநர் சுற்றறிக்கை பிறப்பித்திருந்தார். மாநில தகவல் ஆணையம் மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குநர் பிறப்பித்த இந்தச் சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி, அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கே. பழனியப்பன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம். தண்டபாணி, தனியார் பள்ளிகள் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் வரம்புக்குள் வராது என்றாலும், தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைச் சட்டத்தின்படி வெளிப்படைத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார். எனவே, மாநிலம் முழுவதும் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளும் கல்விக் கட்டண விவரங்களைத் தங்களது பள்ளி விளம்பரப் பலகைகளில் கட்டாயம் வெளியிட வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆடிஷன் என்ற பெயரில் நடிகையிடம் அத்துமீறல் : போலி தயாரிப்பாளர் உட்பட 3 பேர் கைது!
செவ்வாய் 14, ஜூலை 2026 12:22:47 PM (IST)

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு 4,41,667 மோதிரங்கள் கொள்முதல்: டெண்டர் அறிவிப்பு!
செவ்வாய் 14, ஜூலை 2026 10:19:34 AM (IST)

தூத்துக்குடியில் இறைச்சி வியாபாரி வெட்டிக்கொலை : வேகமாக பைக் ஓட்டியதைக் கண்டித்ததால் கொடூரம்!
செவ்வாய் 14, ஜூலை 2026 8:37:01 AM (IST)

மதுரை அருகே பஸ்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: நெல்லை ஆசிரியை உள்பட 6 பேர் பலி
செவ்வாய் 14, ஜூலை 2026 7:58:55 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் ரூ.1.82 கோடியில் புதிய காத்திருப்புக் கூடம்: பணிகள் தீவிரம்
செவ்வாய் 14, ஜூலை 2026 7:35:12 AM (IST)

வரதட்சணை நகைகளைத் திரும்பக் கேட்ட தாய் : காவல் நிலையத்தில் புதுப்பெண் அதிரடிப் புகார்!
திங்கள் 13, ஜூலை 2026 4:58:41 PM (IST)


