» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
காங்கிரஸ் அமைச்சரை விடுவிக்கத் தவெக அரசு தயாரா? எடப்பாடி பழனிசாமி கேள்வி
வியாழன் 9, ஜூலை 2026 4:53:50 PM (IST)

காவிரியில் தமிழகத்திற்குரிய நீரை விடுவிக்கவில்லையெனில், கர்நாடக காங்கிரஸ் கட்சியை எச்சரிக்கத் தவெக அரசின் முதல்வர் தயாராக உள்ளாரா? என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாரதத்தில் சர்வாதிகார மனப்பான்மையுடனும் சகோதரத்துவத்தைச் சீர்குலைக்கும் எண்ணத்துடனும் கர்நாடகத்தை நிர்வகிக்கும் காங்கிரஸ் ஆட்சியாளர்கள் திகழ்வது நாட்டின் சாபக்கேடு எனக் குறிப்பிட்டுள்ளார். தமிழக டெல்டா மாவட்ட விவசாயமும், 20-க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் குடிநீரும் காவிரியையே நம்பியுள்ள சூழலில், நதிநீர் தகராறு தீர்ப்பாயம் மற்றும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகளைக் கர்நாடக ஆட்சியாளர்கள் தொடர்ந்து உதாசீனப்படுத்தி வருவதாகச் சாடியுள்ளார். மேலும், கர்நாடக காங்கிரஸ் கட்சியின் முதலமைச்சர் டி.கே.சிவகுமார், அங்கு வாழும் தமிழர்களின் உழைப்பை மறந்துவிடக் கூடாது என்றும் எச்சரித்துள்ளார்.
தமிழகத்திற்குத் தண்ணீர் தர முடியாது என்றும், காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிடவில்லை என்றும் கர்நாடக நீர்ப்பாசனத் துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறுவது வடிகட்டிய பொய் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நீதிமன்ற வழிகாட்டுதலைக் கர்நாடக அரசு முறையாகச் செயல்படுத்துகிறதா என்பதைக் கண்காணிப்பதுதான் மேலாண்மை ஆணையத்தின் பணி என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழக மக்களின் வாழ்வாதாரத்தோடு கர்நாடக காங்கிரஸ் விளையாடுவதைத் தவெக அரசு கைகட்டி வேடிக்கை பார்க்கக் கூடாது என அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் கர்நாடகம் வழங்க வேண்டிய பங்கு நீரைப் பெறுவதற்குத் தவெக அரசின் முதலமைச்சர் உடனடியாக வலியுறுத்த வேண்டும் எனக் கோரியுள்ளார். காவிரியில் தமிழகத்திற்குரிய நீரை விடுவிக்கவில்லையெனில், ‘தமிழக அமைச்சரவையில் இருந்து காங்கிரஸ் அமைச்சர் விடுவிக்கப்படுவார்’ என்று கர்நாடக காங்கிரஸ் கட்சியை எச்சரிக்கத் தவெக அரசின் முதல்வர் தயாராக உள்ளாரா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
‘அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாகும்’ என்ற சிலப்பதிகார வரிகளை நினைவு கூர்ந்து, ஆட்சிப் பொறுப்பில் இருந்து தவறி மக்களுக்கு அநீதி இழைப்பவர்களை அறநெறியே தண்டிக்கும் எனத் தமிழக, கர்நாடக இரு ஆட்சியாளர்களையும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் எச்சரித்துள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் ஜூலை 14 முதல் மானியக் கடன் சிறப்பு முகாம்கள்: ஆட்சியர் தகவல்!
வியாழன் 9, ஜூலை 2026 5:04:06 PM (IST)

கரூர் கூட்ட நெரிசலில் பலியானோர் குடும்பங்களுக்கு அரசு வேலை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்ப்பு
வியாழன் 9, ஜூலை 2026 3:33:15 PM (IST)

கரூரில் நாளை முதல்வர் விஜய் பங்கேற்கும் அரசு விழா: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!
வியாழன் 9, ஜூலை 2026 3:18:55 PM (IST)

சாதிச் சான்றிதழ் அரசாணை ரத்துக்கு எதிர்ப்பு: உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மேல்முறையீடு!
வியாழன் 9, ஜூலை 2026 12:19:45 PM (IST)

கல்விக் கட்டண விவரங்களை விளம்பரப் பலகையில் வெளியிடுவது கட்டாயம்: உயர் நீதிமன்றம் அதிரடி!
வியாழன் 9, ஜூலை 2026 11:56:54 AM (IST)

அரசுப் பள்ளி மாணவியிடம் மனிதாபிமானமின்றி நடப்பதா? தவெக அமைச்சருக்கு கீதாஜீவன் கண்டனம்!
வியாழன் 9, ஜூலை 2026 8:06:45 AM (IST)


