» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அனுமதியின்றி வெளிநாட்டுப் பயணம்: அமைச்சர்கள் கீர்த்தனா, ராஜ்மோகனுக்கு மத்திய அரசு விளக்க நோட்டீஸ்!
வெள்ளி 17, ஜூலை 2026 10:10:22 AM (IST)
அரசு முறை வெளிநாட்டுப் பயணம் தொடர்பாகத் தமிழக அமைச்சர்கள் கீர்த்தனா மற்றும் ராஜ்மோகன் ஆகியோருக்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தமிழகத் தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா மற்றும் பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சி, செய்தித்துறை அமைச்சர் ராஜ்மோகன் ஆகிய இருவரும் துறை சார்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் தங்களது தனி உதவியாளர்களுடன் சமீபத்தில் அரசு முறை பயணமாக வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பியுள்ளனர்.பொதுவாக, மாநில அமைச்சர்களோ அல்லது உயர் அதிகாரிகளோ அரசு முறை பயணமாக வெளிநாடு செல்லும்போது மத்திய வெளியுறவுத்துறை மற்றும் உள்துறை அமைச்சகத்தின் முறையான அனுமதியைப் பெற வேண்டும் என்பதுடன், 'டிப்ளமேடிக் பாஸ்போர்ட்' மூலமாகவே பயணிக்க வேண்டும் என்ற விதியும் நடைமுறையில் உள்ளது.
ஆனால், இந்த இரு அமைச்சர்களும் மத்திய அரசின் முன் அனுமதி பெறாமலும், 'டிப்ளமேடிக் பாஸ்போர்ட்டை பயன்படுத்தாமல் தங்களது சொந்தப் பாஸ்போர்ட் மூலமாகவும் வெளிநாடு சென்று வந்துள்ளதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு விளக்கம் கேட்டு ('ஷோ காஸ்') நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மத்திய அரசின் அனுமதி இல்லாமல் அமைச்சர்கள் எவ்வாறு வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ளலாம் என்று அதில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரத்தில் தமிழக அரசின் தலைமைச் செயலக அதிகாரிகள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தங்களது கடமையைச் சரியாகச் செய்யவில்லை என்றும், அரசை முறையாக வழிநடத்தத் தவறிவிட்டனர் என்றும் மத்திய அரசு சுட்டிக்காட்டியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திருச்செந்தூர் புதிய பேருந்து நிலைய விவகாரம்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்!
வெள்ளி 17, ஜூலை 2026 5:12:51 PM (IST)

நீட் முறைகேடு போராட்டம்: சோனம் வாங்சுக்குடன் மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த சீமான் கோரிக்கை!
வெள்ளி 17, ஜூலை 2026 4:53:33 PM (IST)

அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் தொழில் பழகுநர் பயிற்சி: பட்டதாரிகள் விண்ணப்பிக்க அழைப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 4:42:15 PM (IST)

நாகர்கோவில் - கோவை அதிவிரைவு ரயிலில் கூடுதலாக ஒரு படுக்கை வசதிப் பெட்டி தற்காலிக இணைப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 4:25:32 PM (IST)

நாகர்கோவில் கிளைச் சிறையில் கைதிகளின் பாதுகாப்பு கேள்விக்குறி: சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு!
வெள்ளி 17, ஜூலை 2026 3:43:19 PM (IST)

தமிழகத்தில் 50-க்கும் மேற்பட்ட டெண்டர்கள் ரத்து: நகராட்சி நிர்வாகத்துறை உத்தரவு
வெள்ளி 17, ஜூலை 2026 3:27:42 PM (IST)


