» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

உப்பு நிறுவன கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து வாலிபர் பலி - தூத்துக்குடி அருகே சோகம்!

சனி 25, ஜூலை 2026 10:45:32 AM (IST)

தூத்துக்குடி அருகே உப்பு நிறுவனத்தில் ஆஸ்பெஸ்டாஸ் கூரை பராமரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, 30 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்த வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மதுரை திரவிய லிங்கேஸ்வரர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சந்தனம் மகன் அழகேந்திரன் (34). வெல்டிங் தொழிலாளி. இவருக்கு  திருமணமாகவில்லை. இவர் கோவங்காடு அருகே உள்ள பழையகாயலைச் சேர்ந்த கணேசன் என்பவருக்கு சொந்தமான உப்பு நிறுவனத்தில், கடந்த திங்கட்கிழமை முதல் தனது 5 நண்பர்களுடன் தங்கி ஆஸ்பெஸ்டாஸ் கூரை பராமரிப்புப் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இந்நிலையில், அழகேந்திரன் கம்பி வழியே மேலே ஏற முயன்றபோது எதிர்பாராத விதமாகச் கால்தவறி சுமார் 30 அடி உயரத்திலிருந்து கீழே விழுந்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை, உடனிருந்தவர்கள் மீட்டுத் தனியார் ஆம்புலன்ஸ் மூலமாகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சாயர்புரம் காவல் நிலைய ஆய்வாளர் ஜெயந்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory