» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன்... இனி அன்புமணிதான் எல்லாம்: ராமதாஸ் அறிவிப்பு!
சனி 25, ஜூலை 2026 4:58:54 PM (IST)

தனது 88-வது பிறந்தநாளை முன்னிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் தீவிர அரசியலில் இருந்து முழுமையாக விலகுவதாக அறிவித்துள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று தனது 88-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதனை முன்னிட்டுத் திண்டிவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது குறித்து அவர் பேசுகையில்: "அரசியலில் இருந்து விலகுகிறேன். இனி நான் அரசியல் பேச மாட்டேன், அரசியலில் தலையிடவும் மாட்டேன். அரசியலை இனி அன்புமணி பார்த்துக்கொள்வார். அரசியல் ரீதியாக யாரும் என்னை வந்து சந்திக்க வேண்டாம். நான் இனி அரசியல் துறவறம் மேற்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு பாமக இளைஞரணி தலைவர் நியமனம் தொடர்பாக ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்த மோதல் உச்சமடைந்து, பாமகவின் கொடி மற்றும் சின்னம் தொடர்பாகத் தேர்தல் ஆணையம் மற்றும் சென்னை உரிமையியல் நீதிமன்றம் வரை வழக்குகள் சென்றன.
அதன் தொடர்ச்சியாக நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ராமதாஸ் தனியாக வேட்பாளர்களை நிறுத்திய நிலையில், தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பின்னடைவைச் சந்தித்தது. இதனைத் தொடர்ந்து, ராமதாஸின் 61-வது திருமண நாள் விழாவில் அன்புமணி பங்கேற்றுத் தந்தையைச் சந்தித்ததைத் தொடர்ந்து இருவருக்கும் இடையேயான மோதல் முடிவுக்கு வந்தது. அன்புமணிக்கு எதிராக நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கையும் ராமதாஸ் திரும்பப் பெற்றார்.
தற்போது ராமதாஸின் 88-வது பிறந்தநாளை முன்னிட்டு தைலாபுரம் இல்லத்தில் அன்புமணியைச் சந்தித்து வாழ்த்துப் பெற்ற நிலையில், ராமதாஸ் தனது அரசியல் ஓய்வை முறைப்படி அறிவித்துள்ளார். இதன் மூலம் பாமகவின் முழு அரசியல் கட்டுப்பாடும் அன்புமணி வசமாகியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

குமரியில் நாஞ்சில் நாட்டு உணவுத் திருவிழா : அமைச்சர் செ.ராஜேஷ் குமார் துவக்கி வைத்தார்!
சனி 25, ஜூலை 2026 5:11:49 PM (IST)

சிறுவனுடன் பழகி கர்ப்பமான இளம்பெண் மீது போக்சோ வழக்குப் பதிவு: குமரியில் பரபரப்பு!
சனி 25, ஜூலை 2026 4:51:54 PM (IST)

எங்கு ஒளிந்து கொண்டிருக்கிறார்? முதல்வர் வாய் திறப்பது எப்போது? - மு.க.ஸ்டாலின் கேள்வி
சனி 25, ஜூலை 2026 12:20:26 PM (IST)

தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் மீண்டும் இடமாற்றமா? – அரசு தீவிர ஆலோசனை!
சனி 25, ஜூலை 2026 11:44:43 AM (IST)

மின்சாரம் தாக்கி 11 வயது பள்ளி மாணவி உயிரிழப்பு : தூத்துக்குடியில் பரிதாபம்!
சனி 25, ஜூலை 2026 10:51:20 AM (IST)

உப்பு நிறுவன கட்டிடத்திலிருந்து தவறி விழுந்து வாலிபர் பலி - தூத்துக்குடி அருகே சோகம்!
சனி 25, ஜூலை 2026 10:45:32 AM (IST)


