» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
லயோலா கல்லூரியில் புதிய வகுப்பறை கட்ட டிஎம்பி அறக்கட்டளை ரூ.25 லட்சம் நிதியுதவி!
சனி 1, ஆகஸ்ட் 2026 8:13:28 PM (IST)

டிஎம்பி அறக்கட்டளை சார்பில் சென்னை லயோலா கல்லூரியின் புதிய வகுப்பறை கட்டுமானத்திற்காக ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக முன்னேற்றத் திட்டங்களில் பங்களித்து வரும் டிஎம்பி அறக்கட்டளை, சென்னை லயோலா கல்லூரியின் நூற்றாண்டு விழாவையொட்டி புதிய வகுப்பறை கட்டுமானத்திற்காக ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளது. 100 ஆண்டுகளாக உயர்கல்வித் துறையில் பணியாற்றி வரும் லயோலா கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, தரமான கல்வியை மேலும் பல மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கில் இந்த நிதி வழங்கப்பட்டுள்ளதாக அறக்கட்டளை தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 31 அன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் செயல் இயக்குநர் வின்சென்ட் மேனச்சேரி தேவஸ்ஸி, ரூ.25 லட்சத்திற்கான காசோலையை லயோலா கல்லூரி சங்கத்தின் ரெக்டரும் துணைத் தலைவருமான ஆண்டனி ராபின்சனிடம் வழங்கினார்.
இந்நிகழ்வில் டிஎம்பி அறக்கட்டளையின் துணைத் தலைவர் டி. இன்பமணி, தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியின் செயல் துணைத் தலைவர் பி.ஆர். அசோக் குமார், லயோலா கல்லூரி சங்கத்தின் செயலாளர் மற்றும் பொருளாளர் டி. செல்வநாயகம், கல்லூரி முதல்வர் முனைவர் அ. லூயிஸ் அரோக்கியராஜ் மற்றும் கல்லூரியின் மூத்த பேராசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அமைச்சர் நிர்மல் குமார் அநாகரிக பேச்சு: அனிதா ராதாகிருஷ்ணன் கடும் கண்டனம்!
சனி 1, ஆகஸ்ட் 2026 8:27:07 PM (IST)

மதுரை கோட்டத்தில் பொறியியல் பணி – தென்பகுதி ரயில்கள் மாற்றுப் பாதையில் இயக்கம்!
சனி 1, ஆகஸ்ட் 2026 5:43:58 PM (IST)

தவெக பொதுக்கூட்டத்தில் மின்வாரிய உயர் அதிகாரிகள் : அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
சனி 1, ஆகஸ்ட் 2026 4:48:13 PM (IST)

தென் மாவட்டங்களில் கைத்தறி பூங்கா அமைக்க நடவடிக்கை: அமைச்சர் விஜய் பாலாஜி ஆய்வு!
சனி 1, ஆகஸ்ட் 2026 4:39:21 PM (IST)

கன்னியாகுமரிக்கு புதிய ரயில்வே கோட்டம்: மத்திய அமைச்சரிடம் விஜய் வசந்த் எம்.பி. கோரிக்கை!
சனி 1, ஆகஸ்ட் 2026 4:24:02 PM (IST)

200 யூனிட் இலவசம் எனக்கூறி 4 மடங்கு மின்கட்டண உயர்வு: சீமான் கடும் கண்டனம்!
சனி 1, ஆகஸ்ட் 2026 3:40:42 PM (IST)


