» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தூத்துக்குடியில் பஞ்சு குடோனில் பயங்கர தீவிபத்து : ரூ.25 கோடி மதிப்பிலான மூட்டைகள் எரிந்து நாசம்!
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 9:37:52 AM (IST)
தூத்துக்குடி பைபாஸ் சாலையில் உள்ள தனியார் பஞ்சு குடோனில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில், ரூ.25 கோடி மதிப்பிலான பஞ்சு மூட்டைகள் எரிந்து சேதமடைந்தன.
தூத்துக்குடி பைபாஸ் சாலையில், ஸ்டெர்லைட் தொழிற்சாலை அருகே 'எஸ்.ஏ. ராயன் என்டர்பிரைசஸ்' என்ற நிறுவனத்திற்குச் சொந்தமான பிரம்மாண்ட பஞ்சு குடோன் இயங்கி வருகிறது. நாகர்கோவிலைச் சேர்ந்த ஜான் ரோசரி ஆல்பர்ட் ராயன் என்பவருக்குச் சொந்தமான இந்த குடோனை, புதுக்கோட்டை மறவன்மடத்தைச் சேர்ந்த பெரியசாமி (64) என்பவர் மேலாளராக நிர்வகித்து வருகிறார்.
இந்த குடோனில் மதுரை டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான பஞ்சு மூட்டைகள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன. இதனை மதுரை நிறுவனத்தின் மேலாளர் சின்னராஜா (37) பராமரித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை சுமார் 6:30 மணியளவில் குடோனின் உட்பகுதியில் எதிர்பாராதவிதமாகத் தீப்பிடித்தது. பஞ்சு மூட்டைகள் அதிகளவில் இருந்ததால், தீ கணநேரத்தில் குடோன் முழுவதும் அதிவேகமாகப் பரவி கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
தகவலறிந்து வந்த சிப்காட், தூத்துக்குடி டவுன் மற்றும் ஸ்டெர்லைட் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 3 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டன. குடோனின் கதவுப் பகுதியை ஜேசிபி இயந்திரம் மூலம் உடைத்து, தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.
இந்தத் தீவிபத்தில் குடோனில் வைக்கப்பட்டிருந்த மதுரை நிறுவனத்திற்குச் சொந்தமான சுமார் 6,500 பஞ்சு மூட்டைகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. இதன் மதிப்பு சுமார் ரூ.25 கோடி இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்து நடந்த இடத்தை தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சிவப்பிரகாஷ் நள்ளிரவு நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். தீவிபத்து குறித்து சிப்காட் போலீசார் வழக்குப் பதிவு செய்து, மின் கசிவு காரணமாகத் தீப்பிடித்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவை - தூத்துக்குடி இடையே விமான சேவை: மத்திய, மாநில அரசுகளுக்கு தொழில்துறையினர் கோரிக்கை!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 10:51:13 AM (IST)

அரசியல் சூட்டைத் தணித்த கனமழை: தமிழகத்தை நோக்கிப் பொங்கி வரும் காவிரி - விவசாயிகள் மகிழ்ச்சி!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 10:39:51 AM (IST)

பேரன், பேத்தி பேச்சைக் கேட்டு ஓட்டுபோட்டவர்கள் வேதனையில் இருக்கிறார்கள் : ஓபிஎஸ் விமர்சனம்
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 9:01:40 AM (IST)

திருட இடையூறாக இருந்த கண்காணிப்பு கேமரா உடைப்பு: 2 வாலிபர்கள் கைது - கார் பறிமுதல்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 7:48:49 AM (IST)

365 நாட்களில் இந்தியாவிற்கே முன்மாதிரி கடற்கரை! – தூத்துக்குடியில் அண்ணாமலை உறுதி!
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 8:52:03 PM (IST)

தூய பரலோக மாதா பேராலய விண்ணேற்பு பெருவிழா ஆகஸ்ட் 6-ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்!
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 11:02:10 AM (IST)


