» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பேரன், பேத்தி பேச்சைக் கேட்டு ஓட்டுபோட்டவர்கள் வேதனையில் இருக்கிறார்கள் : ஓபிஎஸ் விமர்சனம்
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 9:01:40 AM (IST)
பேரன், பேத்தி பேச்சைக் கேட்டு ஓட்டு போட்ட மக்கள் வேதனையில் இருப்பதாக த.வெ.க. அரசை ஓ.பன்னீர்செல்வம் கடுமையாக விமர்சித்து பேசினார்.
தேனியை அடுத்த பழனிசெட்டிபட்டியில் ஒரு தனியார் தங்கும் விடுதி கூட்டரங்கில் தேனி வடக்கு மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நடந்தது. வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதமிழ்செல்வன் எம்.பி. தலைமை தாங்கி பேசினார். இதில், முன்னாள் முதல்-அமைச்சரும், போடி எம்.எல்.ஏ.வுமான ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசியதாவது:-
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் மக்களின் முடிவை புரிந்து கொள்ளவே முடியவில்லை. பேரன், பேத்திகளின் பேச்சைக் கேட்டு த.வெ.க.வுக்கு ஓட்டு போட்டு விட்டனர். ஓட்டுபோட்ட மக்கள் இப்போது வேதனையில் இருக்கிறார்கள்.
காவிரி நதிநீர் உள்பட தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்கும் ஒரே இயக்கம் தி.மு.க. தான். நான் ஒரு கட்சியின் உயர் பதவிகளில் இருந்தேன். முதல்-அமைச்சராக இருந்தேன். தமிழகத்தின் உரிமைகளுக்காக துணை நிற்கும் இயக்கம் தி.மு.க. என்பதால் நான் தி.மு.க.வில் இணைந்தேன்.
சட்டசபையில் எதிர்க்கட்சிகள் கேள்விகள் கேட்டால் உடனே பதில் அளிக்கும் இடத்தில் தான் நாங்கள் இருந்தோம். ஆனால், இப்போதைய முதல்-அமைச்சர் எந்த கேள்வி கேட்டாலும் அமைதியாக இருக்கிறார். அதை பார்க்கும் போது எனக்கு கவுண்டமணி, செந்திலின் ஒரு காமெடி காட்சி தான் நினைவுக்கு வருகிறது. ஒரு மாயையை உருவாக்கி விஜய் ஆட்சிக்கு வந்து விட்டார்.
தமிழகத்தில் அடுத்து தி.மு.க. தான் ஆட்சிக்கு வரும். மக்களும் அதை தான் விரும்புகிறார்கள். எனவே, தி.மு.க.வை மீண்டும் ஆட்சியில் அமர்த்த என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து அதற்கான வேலைகளில் கட்சியினர் ஈடுபட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
ஓ.பன்னீர்செல்வம் த.வெ.க.வில் இணையப் போவதாக பல்வேறு கருத்துகள் பரவி வந்தன. அவை வதந்தி என்றும், அதற்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் ஓ.பன்னீர்செல்வத்தின் இந்த பேச்சு இருந்ததாக கூட்டத்தில் பங்கேற்ற நிர்வாகிகள் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

கோவை - தூத்துக்குடி இடையே விமான சேவை: மத்திய, மாநில அரசுகளுக்கு தொழில்துறையினர் கோரிக்கை!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 10:51:13 AM (IST)

அரசியல் சூட்டைத் தணித்த கனமழை: தமிழகத்தை நோக்கிப் பொங்கி வரும் காவிரி - விவசாயிகள் மகிழ்ச்சி!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 10:39:51 AM (IST)

திருட இடையூறாக இருந்த கண்காணிப்பு கேமரா உடைப்பு: 2 வாலிபர்கள் கைது - கார் பறிமுதல்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 7:48:49 AM (IST)

365 நாட்களில் இந்தியாவிற்கே முன்மாதிரி கடற்கரை! – தூத்துக்குடியில் அண்ணாமலை உறுதி!
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 8:52:03 PM (IST)

தூய பரலோக மாதா பேராலய விண்ணேற்பு பெருவிழா ஆகஸ்ட் 6-ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்!
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 11:02:10 AM (IST)

தூத்துக்குடியில் பஞ்சு குடோனில் பயங்கர தீவிபத்து : ரூ.25 கோடி மதிப்பிலான மூட்டைகள் எரிந்து நாசம்!
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 9:37:52 AM (IST)


