» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோவை - தூத்துக்குடி இடையே விமான சேவை: மத்திய, மாநில அரசுகளுக்கு தொழில்துறையினர் கோரிக்கை!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 10:51:13 AM (IST)

தொழில் நகரங்களான கோவை - தூத்துக்குடி இடையே நேரடி விமான சேவையைத் தொடங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தொழில்துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவையில் தென்மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் வசித்து வரும் நிலையில், பலர் பல்வேறு தொழில் நிறுவனங்களையும் நடத்தி வருகின்றனர். இங்கிருந்தும், பின்னலாடை நகரமான திருப்பூரில் இருந்தும் ஜவுளி மற்றும் எந்திரங்களின் உதிரிபாகங்கள் கொச்சி மற்றும் தூத்துக்குடி துறைமுகங்கள் வழியாகவே பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
கோவையில் இருந்து கொச்சிக்கு விமான சேவை உள்ள நிலையில், தூத்துக்குடிக்கு நேரடி விமான சேவை இல்லை. இதனால் தொழில்துறையினர் ரயில்கள், ஆம்னி பேருந்துகள் மற்றும் கார்களிலேயே நீண்ட தூரம் பயணிக்க வேண்டிய கட்டாயம் நிலவுகிறது.
இது குறித்துக் கோவை தொழில் வர்த்தக சபையின் முன்னாள் தலைவர் நந்தகுமார் மற்றும் தொழில்துறையினர் தெரிவித்ததாவது: "மத்திய அரசின் 'உதான்' (UDAN) திட்டத்தின் கீழ் சிறிய மற்றும் நடுத்தர நகரங்கள் வான்வழியாக இணைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், கோவையில் இருந்து தூத்துக்குடி மற்றும் திருவனந்தபுரத்திற்கு விமான சேவையைத் தொடங்க வேண்டும்.
கோவை மற்றும் தூத்துக்குடி ஆகிய இரண்டு இடங்களிலுமே தற்போது விமான நிலைய விரிவாக்கப் பணிகள் நடப்பதால், ஆரம்பக் கட்டமாக 72 முதல் 78 இருக்கைகள் கொண்ட ஏ.டி.ஆர்.-72 (ATR-72) என்ற சிறிய ரக விமானங்களை இயக்கலாம். இதன் மூலம் தொழில்துறையினர் மட்டுமின்றி, கோவையில் இருந்து திருச்செந்தூர் கோயிலுக்குச் செல்லும் ஆன்மிகப் பயணிகளும் பெருமளவில் பயனடைவார்கள்."
இது குறித்துக் கோவை விமான நிலைய அதிகாரிகள் கூறுகையில், கோவையில் இருந்து தூத்துக்குடி, மதுரை, திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களுக்கு விமானங்களை இயக்க வேண்டும் என்ற கோரிக்கை குறித்து மத்திய இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திற்குத் (AAI) தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், மத்திய அரசிடமிருந்து அனுமதி கிடைத்தவுடன் சேவைகளைத் தொடங்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அரசியல் சூட்டைத் தணித்த கனமழை: தமிழகத்தை நோக்கிப் பொங்கி வரும் காவிரி - விவசாயிகள் மகிழ்ச்சி!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 10:39:51 AM (IST)

பேரன், பேத்தி பேச்சைக் கேட்டு ஓட்டுபோட்டவர்கள் வேதனையில் இருக்கிறார்கள் : ஓபிஎஸ் விமர்சனம்
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 9:01:40 AM (IST)

திருட இடையூறாக இருந்த கண்காணிப்பு கேமரா உடைப்பு: 2 வாலிபர்கள் கைது - கார் பறிமுதல்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 7:48:49 AM (IST)

365 நாட்களில் இந்தியாவிற்கே முன்மாதிரி கடற்கரை! – தூத்துக்குடியில் அண்ணாமலை உறுதி!
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 8:52:03 PM (IST)

தூய பரலோக மாதா பேராலய விண்ணேற்பு பெருவிழா ஆகஸ்ட் 6-ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்!
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 11:02:10 AM (IST)

தூத்துக்குடியில் பஞ்சு குடோனில் பயங்கர தீவிபத்து : ரூ.25 கோடி மதிப்பிலான மூட்டைகள் எரிந்து நாசம்!
ஞாயிறு 2, ஆகஸ்ட் 2026 9:37:52 AM (IST)


