» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
கோவை, மேட்டுப்பாளையத்திற்கு கூடுதல் ரயில்கள் தேவை: பயணிகள் சங்கம் வலியுறுத்தல்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 3:53:34 PM (IST)

கன்னியாகுமரியில் இருந்து பொள்ளாச்சி, கோவை வழியாக மேட்டுப்பாளையத்திற்குத் தினசரி இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் சார்பில் ரயில்வே அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்களில் இருந்து கோவைக்கு தற்போது நாகர்கோவில் - கோவை பகல் நேரப் பயணிகள் ரயில் மற்றும் நாகர்கோவில் - கோவை இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில் ஆகிய 2 தினசரி ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. இவை ஈரோடு, திருப்பூர் வழியாகச் செல்வதால், பயண நேரம் அதிகமாகிறது.
அதேவேளையில், திண்டுக்கல் - பழநி - பொள்ளாச்சி - கோவை வழித்தடம் அகலப் பாதையாக மாற்றப்பட்ட பிறகும், அதில் போதிய அளவு ரயில்கள் இயக்கப்படுவதில்லை எனப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
ஊட்டி மலை ரயிலைப் பிடிக்க முடியாமல் சுற்றுலாப் பயணிகள் அவதி:
சென்னையில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் ரயில்கள், ஊட்டி செல்லும் பாரம்பரிய மலை ரயிலைப் பிடிக்கும் வகையில் கால அட்டவணையோடு இயக்கப்படுகின்றன.
ஆனால், தென் மாவட்டங்களில் இருந்து நேரடியாக மேட்டுப்பாளையம் செல்ல நேரடி ரயில் வசதி இல்லாததால், சுற்றுலாப் பயணிகள் மேட்டுப்பாளையம் சென்றடைவதற்குள் ஊட்டி மலை ரயில் புறப்பட்டு விடுகிறது. இதனால் பேருந்துகளில் பயணிக்கும் பயணிகள் பல்வேறு சிரமங்களைச் சந்திக்கின்றனர்.
நாகர்கோவிலில் இருந்து பொள்ளாச்சி வழியாக இயக்கப்படும் 'நியூ ஜல்பைகுரி' வாராந்திர அம்ரித் பாரத் ரயிலில் கோவைக்கு அதிகளவில் இருக்கைகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. இதிலிருந்து இவ்வழித்தடத்தில் பயணிகளின் தேவை அதிகமாக இருப்பது தெளிவாகிறது.
மேலும், மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் கூடுதல் நடைமேடைகள் மற்றும் 'பிட்லைன்' விரிவாக்கப் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளதால், அங்கு கூடுதல் ரயில்களை இயக்கச் சாதகமான சூழல் உள்ளது.
எனவே, கன்னியாகுமரியில் இருந்து திருநெல்வேலி, மதுரை, திண்டுக்கல், பழநி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, போத்தனூர், கோவை வழியாக மேட்டுப்பாளையத்திற்குத் தினசரி இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயிலை உடனடியாக இயக்க வேண்டும் என கன்னியாகுமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கத் தலைவர் எஸ்.ஆர். ஸ்ரீராம் வலியுறுத்தியுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

மாற்றுக் கட்சியிலிருந்து இணைந்த நிர்வாகிகளுக்கு தவெகவில் முக்கியப் பொறுப்புகள்: விஜய் அறிவிப்பு
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 5:12:06 PM (IST)

அதிக மதிப்புள்ள கனிமங்களுக்குக் கூடுதல் கட்டணம் செலுத்தி விற்பனை: புதிய அரசாணை வெளியீடு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 5:04:00 PM (IST)

பாளை., சிறைக்குச் சென்ற கனிமொழி எம்.பி.! - மார்க்கண்டேயன் எம்எல்ஏவுடன் நேரில் சந்திப்பு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:49:01 PM (IST)

தூத்துக்குடியில் ரூ.1 கோடி பட்டாசு திருட்டு வழக்கு : த.வெ.க. வழக்கறிஞர் அணி நிர்வாகி உள்பட 6 பேர் கைது!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:17:39 PM (IST)

சாதி, மதமற்றவர் சான்றிதழ் கோரி பார்த்திபன் வழக்கு: தமிழ்நாடு அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 4:12:06 PM (IST)

நாகர்கோவில் மாநகராட்சி முக்கியப் பகுதிகளை அழகுபடுத்த நடவடிக்கை: ஆட்சியர் பிரதாப் தகவல்!
திங்கள் 3, ஆகஸ்ட் 2026 3:35:49 PM (IST)


