» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: தனித்தீர்மானம் கொண்டு வந்தார் முதலமைச்சர் விஜய்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 10:31:40 AM (IST)
தமிழகத்தில் அனைத்து நிகழ்ச்சிகளிலும் தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாட வேண்டும் என்று முதல்வர் முன்மொழிந்த தீர்மானம், சட்டசபையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தில் உள்ள அனைத்துக் கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களின் நிகழ்ச்சிகளில் நிகழ்வு தொடங்குவதற்கு முன்பாகத் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் முதன்மையாகப் பாடப்பட வேண்டும் எனச் சட்டப்பேரவையில் தனித்தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
இத்தீர்மானத்தைக் கொண்டுவந்து முதலமைச்சர் விஜய் பேசியதாவது: "தமிழ் வெறும் மொழி மட்டுமல்ல, அது நம் உயிர். பேசினால் ஓசை மட்டுமல்ல, உணர்வும் பிறக்கும். நம் தாய்மொழி குறித்த உணர்வைப் புரியவைக்க 'தமிழ்மொழி' என்று சொன்னாலே போதும். இந்தியாவின் நெற்றியில் வைக்கப்படும் வெற்றிப் பொட்டுதான் நம் தமிழ்நாடு. தமிழ் என்றால் கெத்து, தமிழ் என்றால் அது தனி பவர்!
உலகம் முழுவதும் தெரிந்த திருக்குறள் ஒன்றே தமிழின் பெருமையைச் சொல்லப் போதுமானது. தமிழ் மொழி என்று வந்துவிட்டால் ஒட்டுமொத்தத் தமிழ்நாடும் ஒன்றாக வந்து நிற்கும். அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்து முதன்மையாகப் பாடப்பட வேண்டும் என 1970-இல் அரசாணை வெளியிடப்பட்டது. தமிழ் மற்றும் தமிழர் பண்பாட்டிற்குச் செலுத்தப்படும் மரியாதையின் வெளிப்பாடே தமிழ்த்தாய் வாழ்த்து.
தமிழ்த்தாய் வாழ்த்து முதலில் பாடப்படுவது மரபுத்தன்மை மற்றும் அரசாணைகளின் வாயிலாகப் பின்பற்றப்படுகிறது. தமிழ்த்தாய் வாழ்த்தின் மரியாதையைப் பாதுகாப்பதில் தவெக அரசு என்றுமே சமரசம் செய்யாது. இதனை அரசியல் சார்ந்த விவாதமாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. கட்சி வேறுபாடுகளைக் கடந்து அனைத்து உறுப்பினர்களும் ஒன்றிணைந்து இத்தீர்மானத்திற்கு ஆதரவளிக்க வேண்டும்." என்றார்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் நிகழ்வுகளில் முதன்மையாகப் பாடப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படவுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஆதரவாளர்கள் கையில் 'நாட்டாமை குடும்பம்' எனப் பச்சை குத்திக் கொள்ள வேண்டும்: நடிகர் சரத்குமார் விருப்பம்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 8:45:19 PM (IST)

பொதுமக்களுக்குத் தடங்கலின்றி சீரான குடிநீர் விநியோகம் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 7:59:50 PM (IST)

கன்னியாகுமரியில் கடலோரக் காவல்படை நிலையம்: விஜய் வசந்த் எம்.பி. வலியுறுத்தல்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 7:53:44 PM (IST)

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் சர்வதேச அங்கீகாரம் : தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் புதிய சாதனை!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 5:18:58 PM (IST)

தமிழக அரசின் அறநிலையத் துறை மாநிலக்குழு உறுப்பினராக அர்ச்சனா கல்பாத்தி நியமனம்!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 4:07:29 PM (IST)

சைபர் குற்றவாளிகளுக்கு வாடகை வங்கி கணக்கு: தமிழகம் முழுவதும் 837 பேர் அதிரடி கைது!
திங்கள் 10, ஆகஸ்ட் 2026 11:37:07 AM (IST)


