» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பொதுமக்களுக்குத் தடங்கலின்றி சீரான குடிநீர் விநியோகம் : ஆட்சியர் தலைமையில் ஆய்வுக்கூட்டம்!

திங்கள் 10, ஆகஸ்ட் 2026 7:59:50 PM (IST)

collemeetraini.jpg

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், வடகிழக்குப் பருவமழைக்கு முன் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் மற்றும் சீரான குடிநீர் வழங்கல் தொடர்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் இன்று (10.08.2026) நடைபெற்றது.

நகர்ப்புற மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள முக்கிய மழைநீர் வடிகால்களைத் தூர்வாரி, அவற்றில் படிந்துள்ள வண்டல் மண்ணை உடனடியாக அகற்ற வேண்டும். நீர்நிலைகள் மற்றும் பாசனக் கால்வாய்களில் மண்டிப்போயுள்ள சீமைக்கருவேல மரங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊரக வளர்ச்சித்துறை மற்றும் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நீர்நிலைகள் மற்றும் கால்வாய்களைப் பருவமழை தொடங்குவதற்கு முன்பாகத் தூர்வார வேண்டும். அரசாணை 50-ன் கீழ் நீர்நிலைகளிலிருந்து எடுக்கப்படும் வண்டல் மண்ணை விவசாயிகளின் பயன்பாட்டிற்கு அவர்களின் நிலங்களுக்கே வழங்க வேண்டும்.

மாவட்டத்தில் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் பொதுமக்களுக்குத் தடங்கலின்றி சீரான குடிநீர் விநியோகம் செய்வதை உறுதி செய்ய அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் நா. சரவணன், உதவி ஆட்சியர் (பயிற்சி) பாட்டீல் கிருஷ்ணா பபுருவான் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் முக்கிய அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory