» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்
பரந்தூர் விமான நிலையத் திட்டம்: நிலங்களை என்ன செய்வீர்கள்? - தங்கம் தென்னரசு கேள்வி!
திங்கள் 24, ஆகஸ்ட் 2026 11:11:45 AM (IST)
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிட்டால், கையகப்படுத்தப்பட்ட நிலங்களை என்ன செய்யப் போகிறீர்கள் எனத் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கேள்வி எழுப்பியுள்ளார்.
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தைக் கைவிடுவதாக சட்ட்டப் பேரவையில் முதல்வர் விஜய் இன்று அறிவித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தங்கம் தென்னரசு "பரந்தூர் புதிய விமான நிலையத்திற்குத் தேவையான 5,746 ஏக்கரளவில், ஏறத்தாழ 90% நிலங்கள் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுவிட்டன.
பல கட்டப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, ஒரு கிராமத்தைத் தவிரப் பெரும்பாலான மக்கள் இதனை ஏற்றுக்கொண்டு இழப்பீட்டுத் தொகையையும் பெற்றுவிட்டனர். தற்போது இத்திட்டத்தைக் கைவிட்டுவிட்டு, ஏற்கனவே கையகப்படுத்திய நிலங்களை என்ன செய்யப் போகிறீர்கள்?
நிலக் கையகப்படுத்தல் சட்டப்படி, எந்த நோக்கத்திற்காக நிலம் எடுக்கப்படுகிறதோ, அதற்காகத்தானே பயன்படுத்த வேண்டும்? நிலத்தைக் கொடுத்துவிட்டு இழப்பீடு பெற்ற மக்களுக்கு அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? அங்கு வேறு திட்டம் கொண்டு வரப்படும் என்றால், அப்போது தவெக அரசு கூறும் சூழலியல் மற்றும் விவசாயிகள் பிரச்சனை தீர்ந்துவிடுமா? என்று கேள்வி எழுப்பினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைப் பேச அனுமதிக்கக் கூடாது: பிரேமலதா விஜயகாந்த் பேச்சு!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:53:04 PM (IST)

கனிம வள கடத்தல், போதைப்பொருள் தடுப்பு: ஆட்சியர் தலைமையில் ஆய்வுக் கூட்டம்!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 5:32:50 PM (IST)

தூத்துக்குடி வி.இ.ரோட்டில் ஆக்கிரமிப்புகள் அகற்றம் : மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 4:54:07 PM (IST)

பேரூராட்சித் தலைவர் மற்றும் அவரது கணவர் கட்சியிலிருந்து நீக்கம் - சிபிஎம் அதிரடி!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 3:51:42 PM (IST)

லெவிஞ்சிபுரம் டாஸ்மாக் கடையை அகற்றாத மர்மம் என்ன?மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி!
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 3:38:42 PM (IST)

மத்திய அரசின் கல்வி உதவித்தொகை திட்டம் : மாணவ, மாணவிகள் விண்ணப்பங்கள் வரவேற்பு
வியாழன் 27, ஆகஸ்ட் 2026 12:48:02 PM (IST)


