» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

ஒரே ஓவரில் 39 ரன்கள்: யுவராஜ் சிங்கின் சாதனை முறியடிப்பு!

செவ்வாய் 20, ஆகஸ்ட் 2024 5:44:04 PM (IST)

சர்வதேச டி20 போட்டிகளில் ஒரு ஓவரில் அதிக ரன்கள் விளாசிய வீரர் என்ற யுவராஜ் சிங்கின் சாதனையை சமோவா தீவைச் சேர்ந்த வீரர் டேரியஸ் விஸ்ஸெர் முறியடித்துள்ளார்.

2026 ஆம் ஆண்டுக்கான டி20 போட்டிகளின் தகுதிச் சுற்று ஆட்டங்கள் சாமோ தீவுகளின் தலைநகரான அபியாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் வனுவாட்டுவைச் சேர்ந்த 28 வயதான வேகப்பந்து வீச்சாளர் நளின் நிபிக்கோ வீசிய 15 ஆவது ஓவரில் முதல் 3 பந்துகளை சிக்ஸருக்கு பறக்கவிட்ட சாமோ வீரர் டேரியஸ் விஸ்ஸெர் மொத்தமாக 6 சிக்ஸர்களுடன் 39 ரன்கள் விளாசி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார்.

நளின் நிபிக்கோ மொத்தமாக 9 பந்துகளை வீசினார். அதில், மூன்று நோ-பால்களும் அடங்கும். டேரியஸ் விஸ்ஸெர் 14 சிக்ஸர்கள், 5 பௌண்டரிகளுடன் 62 பந்துகளில் 132 ரன்கள் விளாசினார். மேலும், சர்வதேச கிரிக்கெட்டில் சதம் விளாசிய சாமோவைச் சேர்ந்த முதல் வீரர் என்றச் சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார் டேரியஸ் விஸ்ஸெர். 15 ஆவது ஓவரில் டேரியஸ் விஸ்ஸெர் ரன்கள் அடித்த விவரம்: 6, 6, 6, 1nb, 6, 0, 1nb, 7nb, 6. 

சாமோ அணி 20 ஓவர்களில் 174 ரன்கள் எடுத்தது. அடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வனுவாட்டு அணியால் 20 ஓவர்களில் 164 ரன்களே எடுக்க முடிந்தது. இதனால், சாமோ அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதற்கு முன்னதாக 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்தின் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டூவர்ட் பிராடுக்கு எதிராக இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் தொடர்ச்சியாக 6 சிக்ஸர்களை அடித்ததன் மூலம், ஒரு ஓவரில் 36 ரன்கள் விளாசியதே சாதனையாக இருந்தது. 17 ஆண்டுகால சாதனையை தற்போது சாமோவைச் சேர்ந்த வீரர் டேரியஸ் விஸ்ஸார் முறியடித்துள்ளார்.

இதேபோல, மேற்கிந்தியத் தீவுகளின் கீரன் பொல்லார்ட் மற்றும் நிக்கோலஸ் பூரன், நேபாளத்தின் தீபேந்திர சிங் ஐரி, இந்தியாவின் ரோஹித் சர்மா, ரிங்கு சிங் இருவரும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரே ஓவரில் 36 ரன்கள் அடித்துள்ளனர். 2023 ஆம் ஆண்டு ஆர்ஜென்டீனாவுக்கு எதிராக சிலி நாட்டின் புளோரன்சியா மார்டினெஸ் 52 ரன்கள் எடுத்ததே மகளிர் டி20 சர்வதேசப் போட்டியில் ஒரே ஓவரில் அடித்த அதிகபட்ச ரன்களாகும்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory