» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு
மெல்போர்ன் டெஸ்ட் : இந்தியாவை வீழ்த்தியது ஆஸ்திரேலியா அணி!
திங்கள் 30, டிசம்பர் 2024 12:43:25 PM (IST)
பார்டர்-கவாஸ்கர் டிராஃபி தொடரின் 4 வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 184 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
மெல்போர்ன் நகரில் நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 474 ரன்களும், 2வது இன்னிங்சில் 234 ரன்களும் எடுத்தது; முதல் இன்னிங்சில் 369 ரன்கள் எடுத்த இந்திய அணி, 2வது இன்னிங்சில் 340 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் 155 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வி அடைந்தது.