» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இங்கிலாந்து 669 ரன்கள் குவித்து ஆல் அவுட்: விக்கெட்டுகள் இழந்து இந்தியா தினறல்!!

சனி 26, ஜூலை 2025 5:46:49 PM (IST)



மான்செஸ்டரில் 4வது டெஸ்டின் 4வது நாள் மதிய உணவு இடைவேளையின் போது இந்தியா ஒரு ரன்னுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. 

இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்டில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இங்கிலாந்து நேற்றைய 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 544 ரன் குவித்து வலுவான நிலையில் இருந்தது.

ஜோ ரூட் சதம் அடித்தார். அவர் 150 ரன்னும் , பென் டக்கெட் 94 ரன்னும் , கிராவ்லி 84 ரன்னும் , பென் ஸ்டோக்ஸ் 77 ரன்னும் ( அவுட் இல்லை), ஆலி போப் 71 ரன்னும் எடுத்தனர். ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் தலா 2 விக்கெட்டும், பும்ரா, கம்போஜ், சிராஜ் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

186 ரன்கள் முன்னிலையுடன் 4 ஆம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த இங்கிலாந்து அணி 669 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 141 ரன்கள் குவித்து அவுட்டானார்.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ஜடேஜா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 311 ரன்கள் பின்னிலையுடன் இந்திய அணி 2 ஆவது இன்னிங்சில் களமிறங்கியது. ரன் எடுப்பதற்கு முன்பாகவே 2 விக்கெட்டுகளை இந்திய அணி இழந்தது. யஸ்ஸ்வி ஜெஸ்வால் மற்றும் சாய் சுதர்சன் ரன் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்கள். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory