» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

சிஎஸ்கே அணியில் இருந்து வெளியேற அஸ்வின் முடிவு?

வெள்ளி 8, ஆகஸ்ட் 2025 4:54:17 PM (IST)

2026 ஐபிஎல் தொடருக்கு முன்பாக சிஎஸ்கே அணியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு அஸ்வின் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரவிச்சந்திரன் அஸ்வின் 2025 ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK) அணிக்காக விளையாடினார். 2025 ஐபிஎல் ஏலத்தில் சிஎஸ்கே அவரை 9.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது. அஸ்வின் 2008 முதல் 2015 வரை சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர், பின்னர் பல அணிகளுக்காக விளையாடி, பின்னர் 2025-ல் மீண்டும் சிஎஸ்கே-வுக்கு திரும்பினார்.

இந்நிலையில் 2026 ஐபிஎல் தொடருக்கு முன்பாக சிஎஸ்கே அணியில் இருந்து தன்னை விடுவிக்குமாறு அஸ்வின் கேட்டுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சமீபத்தில் ராஜஸ்தான் அணியில் இருந்த தன்னை விடுவிக்குமாறு சஞ்சு சாம்சன் கேட்டுக்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ள நிலையில் சிஎஸ்கே அணியில் இருந்து அஸ்வினும் வெளியேற உள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory