» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு

இங்கிலாந்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி: டெஸ்ட் தொடர் சமன்!

திங்கள் 4, ஆகஸ்ட் 2025 4:45:41 PM (IST)



இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட்டில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்று டெஸ்ட் தொடரை சமன் செய்தது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் விளையாடி இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 224 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி அதன் முதல் இன்னிங்ஸில் 247 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

23 ரன்கள் பின் தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 396 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. இதனையடுத்து, இங்கிலாந்து அணிக்கு 374 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இரண்டாவது இன்னிங்ஸில் 374 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணி 367 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன் மூலம், இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

இந்தியா தரப்பில் இரண்டாவது இன்னிங்ஸில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய முகமது சிராஜ் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். பிரசித் கிருஷ்ணா 4 விக்கெட்டுகளையும், ஆகாஷ் தீப் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி 2-2 என்ற கணக்கில் சமன் செய்தது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads




Tirunelveli Business Directory